Sunday, May 31, 2009

விதியென்று சொல்வதா, சர்வதேச சமூகத்தின் சதி என்று சொல்வதா..?

விதியென்று சொல்வதா, சர்வதேச சமூகத்தின் சதி என்று சொல்வதா..?

இவ் விடயம் 31. 05. 2009, (ஞாயிறு), தமிழீழ நேரம் 4:47க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள், செய்திகள் அனைவரும் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஐ.நா. மனித உரிமை கவுன் சிலின் சிறப்புக் கூட்டம் தமிழர்களுக்கு எந்த நீதியையும் வழங்காமல் தோல்வியில் முடிந்து விட்டது! இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகள் பற்றி விவாதிப் பதற்குத்தான் அந்த சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார்கள். ஜெர்மனி, ஃபிரான்ஸ், இத்தாலி, கனடா உள்ளிட்ட பதினேழு நாடுகள் இதற்காகக் கோரிக்கை விடுத்திருந்தன.


ஆனால், அவர்களின் முயற்சி இப்போது இலங்கையின் சூழ்ச்சியாலும், அதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு இன்மை யாலும் ‘வெற்றிகரமாக’த் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்காக ஐரோப்பிய நாடுகள் முயற்சி எடுத்தபோதே, அதைத் தோற்கடிக்க இந்தியா களமிறங்கிவிட்டது. அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த தூதர்களின் கூட்டத்தை மே 15-ம் தேதி கூட்டினார்கள். அதில் இந்தியா, பாகிஸ்தான்,

எகிப்து, கியூபா ஆகிய நாடுகளின் தூதர்களைக்கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டது. ஜூன் மாதம் நடக்கவிருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் வரைக்கும் இந்தக் குழு இலங்கைக்கு ஆதர வான நடவடிக்கைகளை மேற்கொள்வதென்று முடிவுசெய்யப்பட்டது. ‘ஐரோப்பிய யூனியன் நாடுகள் சில, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்காக செய்துவந்த முயற்சிகளை முறியடித்து, அதற்கு மாற்றாக சில யோசனைகளை முன்வைப்பது’ என்பதே இக்குழுவின் நோக்கமென்றும் அறிவிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் கடைசிக் கட்டப் படுகொலைகள் நடத்தப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகத்தான் இந்தக் குழு அமைக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கதாகும். ஆனால், இந்த முயற்சிகளையும் மீறி, சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுவிடும் என்று தெரிந்த தால்தான், இலங்கை அரசு வன்னியில் அந்த இனப் படுகொலையை அவசர அவசரமாக நடத்தியிருக்கிறது போலும். ஐரோப்பிய நாடுகள் தலையிட்டு தமிழர்களைக் காப்பாற்றிவிடுமோ என்ற அச்சம், இலங்கை அரசுக்கும் அதன் கூட்டாளி நாடுகளுக்கும் வந்திருக்கக்கூடும். முள்ளிவாய்க்கால் பகுதியில் உதவி கேட்டுக் கதறிக்கொண்டிருந்த தமிழர்களுக்கு ஒரு உதவியும் கிடைத்துவிடாமல் இலங்கையும் அதன் கூட்டாளி நாடுகளும் பார்த்துக்கொண்டன. அதேபோலத்தான் இப்போதும் உயிர் பிழைத்துள்ள தமிழர்களுக்கு உதவி கிடைக்காமல் செய்திருக்கிறார்கள்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் தலைவராக இருக்கும் மார்டின் உகோமெய்பி அந்த சிறப்புக் கூட்டத்தின் தொடக்க உரையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைத் தெளிவாகவே சுட்டிக்காட்டியிருந்தார். அதைவிடவும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் ஹை கமிஷனராக இருக்கும் திருமதி நவநீதம் பிள்ளையின் அறிக்கை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சற்றே நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.

‘சிவிலியன்கள் மீது கனரக ஆயூதங்களைப் பயன்படுத்தி இலங்கை அரசு தாக்குதல் நடத்தி யதாகவும், மருத்துவமனைகளைப் பலமுறை குண்டு வீசித் தாக்கியதாகவும், சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தளபதிகளை வஞ்சகமாகக் கொலை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவை போரின் நியதிகளை மீறிய செயல்களாகும்’ என்று விமர்சித்த நவநீதம் பிள்ளை, ‘தமிழர்கள் சிலருக்குப் பொது மன்னிப்பு வழங்கப்போவதாக இலங்கை அரசு கூறியிருக்கிறது. அதனை வைத்து தன்னைக் கருணையுள்ள அரசாகக் காட்ட முயல்கிறது. போர்க்காலக் குற்றங்களைச் செய்து இனப்படுகொலையில் ஈடுபட்ட நபர்களைத் தப்பிக்கச் செய்துவிடலாம் எனவும் இலங்கை அரசு திட்டமிடுகிறது’ என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மனித உரிமை கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நாடுகளின் சார்பில் சுவிட்சர் லாந்தால் முன்மொழியப்பட்ட வரைவுத் தீர்மானத்தைப் பார்த்தபோதே, அந்தக் கூட்டத்தின் மீதான நம்பிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. இலங்கை அரசின் போர்க்காலக் குற்றங்களைப் புலனாய்வு செய்ய சுயேச் சையான சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, இலங்கை அரசாங்கத்திடமே அந்தப் பொறுப்பைக் கையளிப்பதாக அந்தத் தீர்மானம் அமைந்திருந்தது-

‘மனித உரிமைகளும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களும் போர்க்காலத்தில் மீறப்பட்டிருக்கின்றன. அது பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சிவிலியன்கள் மீது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு கவலையளிப்பதாக உள்ளது’ என்று அந்த வரைவுத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்கள். ‘பிணைக் கைதிகளாக மக்களைப் பிடித்து வைப்பது, சித்ரவதை செய்வது, சட்ட விரோதமான கொலைகள் ஆகியவற்றைப் பற்றி இலங்கை அரசாங்கமே விசாரித்து நீதிவழங்கவேண்டும்’ என்றொரு தீர்மானம் அதில் இடம் பெற்றிருந்தது. அந்த வரைவுத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த பதினாறு விஷயங்கள் மட்டும்தான் இலங்கை அரசை சற்று விமர்சிப்பதாக இருந்தது. ஆனால், இதுவும்கூட வாக்கெடுப்பில் தோற்கடிக்கப் பட்டதுதான் வேதனை.

விவாதம் முடிந்தபிறகு, சுவிட்சர்லாந்தால் முன்மொழியப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக பதினேழு வாக்குகளும், எதிராக இருபத்திரெண்டு வாக்குகளும் பதிவாயின. எட்டு நாடுகள் நடுநிலை வகிப்பதாக அறிவித்தன. இந்தத் தீர்மானம் தோற்கடிக்கப் பட்டதைவிடவும் வேதனையான விஷயம், இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்ற தென்பதுதான். இலங்கை அரசின் தீர்மானத்துக்கு ஆதரவாக இருபத்தொன்பது நாடுகளும் எதிராக பன்னி ரெண்டு நாடுகளும் வாக்களித்துள்ளன. ஆறு நாடுகள் நடுநிலை வகித்தன.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தில் இலங்கை அரசு அடைந்துள்ள வெற்றி, முழுக்க முழுக்க இந்தியாவால் கிடைத்த வெற்றியாகும். தமிழர் களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழித்தொழிப்புப் போருக்கு உதவியது மட்டுமல்லாது, அதன்பிறகும் சர்வதேச சமூகத்தின் விமர்சனங்களிலிருந்து இலங் கையை காப்பாற்றுவதற்கும் இந்தியாதான் உதவி செய்துகொண்டிருக்கிறது. இது இங்குள்ள தமிழர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனியவேண்டிய விஷயம்.

இலங்கை அரசைப் பாதுகாப்பதற்காக இந்தியா தன்னுடைய தலைவலி நாடாகக் கருதிவரும் பாகிஸ் தானோடு தன்னையுமறியாமல் கூட்டுச் சேர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பொருளாதாரத் துறையிலும் சர்வதேச அரங்கிலும் இந்தியாவுக்கு போட்டியாகக் கருதப்படும் சீனாவோடும் கைகோத்திருக்கிறது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைகள் நமக்குப் பல கேள்விகளை எழுப்புகின்றன. இலங்கையின் இனவாத அரசு இதுவரை நடத்திவந்த போரில் இந்தியாவும் கூட்டாளியாக இருந்தது உண்மைதானா? இலங்கையின் இன அழித்தொழிப்புக் கொள்கைக்கு இந்தியா இந்த அளவுக்கு ஆதரவளிப்பது ஏன்? இவையெல்லாம் ராஜதந்திர நடவடிக்கைகளா, அல்லது வெளியுறவுத் துறையில் உள்ள ஒரு சிலரின் தமிழர் விரோத அணுகுமுறையால் விளைந்த கொடுமைகளா? இதற்கெல்லாம் இந்திய அரசுதான் விளக்கமளிக்க வேண்டும்.

இலங்கையில் நடந்து முடிந்துள்ள போரும், தற்போது தொடர்ந்துகொண்டு இருக்கும் அவலங்களும் நமக்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகின்றன. ஐ.நா. சபை, சர்வதேச சமூகம் போன்றவற்றின்மீது நம்பிக்கை வைப்பதில் பயனில்லை என்பதே அது. ஐ.நா. சபை என்பது இளிச்சவாய் நாடுகளை மிரட்டுவதற்காக வல்லரசுகளால் பயன்படுத்தப்படும் ஒரு உபகரணம், அவ்வளவுதான். ஈரானை மிரட்ட வேண்டுமா? வடகொரியாவை முடக்க வேண்டுமா? அதற்குத்தான் ஐ.நா. சபை பயன்படும். அமெரிக்கா ஏதாவது ஒரு நாட்டின்மீது படையெடுத்துச் செல்லவேண்டுமென்றால், அதற்கு ஒப்புதல் வழங்க ஐ.நா. தேவைப்படும். மற்றபடி, இத்தகைய சர்வதேச அமைப்புகளால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இதற்கு முன்பும் பலமுறை இப்படியான சிறப்புக் கூட்டங்கள் நடத்தப் பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் பத்தாவது சிறப்புக் கூட்டம் நடந்தது. அதற்கு முந்தைய ஆண்டு நான்கு சிறப்புக் கூட்டங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீன பிரச் னையை இப்படிப் பலமுறை விவாதித்திருக்கிறார்கள். ஒன்பதாவது சிறப்புக் கூட்டத்தில் பாலஸ்தீன பிரச்னை விவாதிக்கப்பட்டபோது, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு, பாலஸ்தீனத்தில் தாக்குதல் நிறுத்தப்பட்டதே தவிர, பிரச்னை தீரவில்லை.

இன்றைய சர்வதேசச் சூழலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா. சபையோ அல்லது வேறெந்த சர்வதேச அமைப்புகளோ எந்த நீதியையும் வழங்கிவிடமுடியாது என்பதே உண்மை. இத்தகைய அமைப்புகள் யாவும் அரசாங்கங்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள உருவாக்கி வைத்திருக்கும் ஏற்பாடுகள்தான்.

எனவே, ஈழத் தமிழர்கள் தற்போதைய இக்கட்டான சூழலிலிருந்து மீண்டு வருவது அவர்களுடைய சுயேச்சையான முயற்சிகளின் மூலம்தான் சாத்தியப்படும் போலிருக்கிறது. உலக அளவில் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள மக்கள் இயக்கங்களோடு ஒன்றிணைந்து தம்முடைய நியாயங் களுக்கு ஆதரவைத் திரட்ட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த நேரத்தில், சர்வதேச நாடுகள் பலவற்றில் ஈழத்தமிழர்கள் எழுச்சியோடு போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், அந்தப் போராட்டங்களுக்கு அந்தந்த நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகளோ மக்களோ பெரிய அளவில் ஆதரவை வழங்கிவிடவில்லை. ஈழத் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் அரசாங்கங்களை அணுகி சிறிய அளவில் லாபி செய்ததும் உண்மை. என்றாலும், அதனால் போரை நிறுத்தவோ தமிழர்கள் மீதான இனப் படுகொலையைத் தடுக்கவோ முடியவில்லை.

இந்த யதார்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். எனவே, இனியாவது மக்கள் இயக்கங்களோடு ஒருங்கிணை வதற்கான வழிகளை அவர்கள் தேடவேண்டும். ஈழப் பிரச்னையைக் கையிலெடுத்துப் போராடிக்கொண்டு இருக்கும் தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாதவரை, இவர்களின் குரல்களுக்கு இந்திய அரசு மதிப்பளிக்காது. எனவே, ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தை முன்வைத்தாவது இங்குள்ள அரசியல் கட்சிகள் யாவும் ஒருங்கிணைய வேண்டியது அவசியம்.

தற்போது இலங்கையில் அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் யாவரும் அவர்களுடைய சொந்த வீடுகளுக்குத் திரும்புகிற தைரியம் வரவேண்டும். அதற்கு இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து இலங்கை அரசு கொடுக்கும் வெற்று வாக்குறுதிகளை இந்தியாவும் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருப்பது தமிழர்களை ஏமாற்றுவதாகவே இருக்கும். அதுமட்டுமல்லாமல், தமிழர்களுக்கு அங்கே சமமான உரிமைகள் கிடைக்க, ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.

தற்போது வெற்றி மிதப்பில் இருக்கும் ராஜபக்ஷே இதைத் தானாக செய்துவிடமாட்டார். இந்தியாதான் அவரை செயல்படவைக்க வேண்டும். ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் கூறப்பட்டதுபோல் இலங்கையின் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களை ஒருங் கிணைத்து தமிழர் தாயகமாக அறிவித்து அதை சுய அதி காரம் கொண்ட அமைப்பாக உருவாக்கினால் மட்டுமே, தமிழர்களுக்கு ஓரளவாவது நியாயம் கிடைக்கும்.

புதிய ஆட்சிப் பொறுப்பேற்று நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து போகிற உறுப்பினர்கள் யாவரும் ஈழத்தமிழர் விவகாரத்தில் ஒரே குரலில் பேசினால் நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும். தேர்தல் சமயத்தில் தி.மு.க. கூட்டணியும் அ.தி.மு.க. கூட்டணியும் இந்த விவகாரத்தில் ஒரே குரலில்தான் பேசின. அது தேர்தலுக்காக மட்டுமே பேசப்பட்டதல்ல என்று நிருபிக்க, அக்கட்சிகளுக்கு இப்போது இது ஒரு வாய்ப்பு!

Thanks to- விகடன்

Thursday, May 28, 2009

என்ன பரிகாரம் காணப்போகிறார் கலைஞர்: ராமதாஸ்

இலங்கை பிரச்சனை தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ’’பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் ராஜபக்சே அரசு பல்லாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறது. நிராயுதபாணிகளாகத் தப்பியோடிய தமிழர்களை குண்டுவீசி தாக்கி படுகொலை செய்திருக்கிறது.


இந்தக் குற்றத்திற்காக ராஜபக்சே மீதும், அவரது சகாக்கள் மீதும் போர்க் குற்ற வழக்குத் தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உலகம் முழுவதும் ஆதரவு திரண்டு வருகிறது.

அதற்கு முதல் படியாக ஐ.நா. அவையின் மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான விசாரணை தொடங்கியிருக்கிறது. கொலை வெறி பிடித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளும், தென்அமெரிக்க நாடுகளும் உலக அரங்கில் அணி திரண்டு நிற்கின்றன.

ஐ.நா. அவையின் மனித உரிமை மன்றத்தில் நடக்கும் விசாரணையை முடக்கிப் போட்டுவிட வேண்டும் என்று இலங்கை பகீரத முயற்சி மேற்கொண்டிருக்கிறது.

சீனா, பாகிஸ்தான் போன்ற நமது பகை நாடுகளுடன் இந்தியாவும் கைகோர்த்துக் கொண்டு இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறது.

இத்தகைய விசாரணை இப்போது தேவையில்லை என்கிற அளவுக்கு மனித உரிமை மன்றத்தின் முதல் நாள் விசாரணையில் இந்தியா வாதிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்களுக்கு எதிரான ராஜபக்சே அரசின் துரோகத்திற்கு இந்தியா துணை போகக் கூடாது என்று உலகத் தமிழர்களெல்லாம் குரல் கொடுத்து வருகிறார்கள். இதற்கு வலிமை சேர்க்கும் வகையில், ஓங்கி குரல் எழுப்ப வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக முதலமைச்சருக்கு இருக்கிறது.

இலங்கை இறையாண்மை மிக்க நாடு; அதன் உள்விவகாரங்களில் தலையிடுவதன் மூலம், அதன் இறையாண்மை, சுதந்திரம் ஆகியவை பாதிக்கப்பட்டுவிடும் என்று இந்தியப் பேரரசு தொடர்ந்து சொல்லி வருவதை தமிழகத்தின் முதலமைச்சரும், எதிரொலித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

ஈழத் தமிழர்களை ஈவு இறக்கமின்றிக் கொன்று குவித்தது தவறு என விசாரணை நடத்த வேண்டும் என்பது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகும் என்றால், அதற்கு காரணமான போருக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவியிருப்பது உள்விவகாரங்களில், தலையிட்டதற்கு ஒப்பாகாதா?

இந்தியா எங்களுக்கு உதவி வந்திருக்கிறது என்று இலங்கைத் தலைவர்கள் பலரும், பலமுறை பகிரங்கமாகவே அறிவித்து நன்றி தெரிவித்து வந்திருக்கிறார்கள். இன்றளவும் இது மறுக்கப்படவில்லை.

இனப் படுகொலைக்கு எதிரான விசாரணையை ஆதரிப்பது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது என்றால், அதற்கு உதவி இருப்பதும், உள்விவகாரங்களில் தலையிட்டதற்கு ஒப்பானதுதான் என்று இந்திய அரசுக்கு உணர்த்த தமிழகத்தின் முதலமைச்சருக்குத் தைரியம் இல்லாமல் போனது ஏன்?

மனித உரிமை மீறல் குறித்த விசாரணையை முடக்கிப் போட இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சி தமிழர்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானது என்று உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் நம்புகிறார்கள்;

தமிழர்களின் உணர்வுகளையும், அவர்களின் எதிர்கால நலன்களையும் கருத்தில் கொண்டு இலங்கைக்குத் துணை நிற்க வேண்டாம் என்று கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிற முதலமைச்சர், இப்போது ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தமிழர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொண்டிருக்கிறது என்ற உண்மை தெரிந்து விட்டதற்குப் பின்னர் என்ன பரிகாரம் காணப்போகிறார்?’’ என்று தெரிவித்துள்ளார்.

எங்கே போனார்கள் தமிழ் உணர்வாளர்கள், தலைவர்கள், போராளிகள்:

இது ஒரு சபிக்கப்பட்ட ஈழத்து குரல்.


ஆட்டு மந்தைகளாக, பஞ்சப் பரதேசிகளாக, பிச்சைகாரர்களாக ,அனாதைகளாக....என் இனம்:

யாருமேயில்லாத அனாதைகளாக செத்துக் கொண்டு இருக்கிறோம். தாய் தமிழகம் எங்களை காப்பாற்றும் என்று நம்பி நம்பி லட்ச கணக்கில் அநியாயமாக செத்துக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் பெண்கள் எல்லாம் கேட்பாரற்று கெட்டு சீரழிகின்றார்கள். பாவப்பட்ட பெற்றவர்கள் தடுக்க வழியின்றி செய்வதறியாது கண்ணீரிலேயே கரைந்து கொண்டிருக்கிறார்கள்.


எங்கள் பிள்ளைகள் முடமாக்கப்பட்டுள்ளார்கள். பஞ்சப் பரதேசிகளாக, பிச்சைகாரர்களாக கையேந்தி கொண்டிருக்கிறோம். முட்கம்பிக்குள்ளே முடக்கப்பட்டு முடமாகி போனோம்.
எங்கள் குரல் நசுக்கப்பட்டு விட்டது. ஆனால் எங்கள் தொப்புள் கொடிகள் என் மவுனமாகி போனார்கள்? காவட் துறைக்கு பயந்து விட்டார்களா இல்லை அரசின் மாயாஜால கதைகளில் நம்பி உறங்கி விட்டார்களா? நாங்கள் தவித்துக் கொண்டு இருக்கும் போது எங்கே போனார்கள் எங்கள் உறவுகள்? வீறு கொண்டு எழுந்தீர்கள். அப்போது நம்பிக்கை கொண்டோம்.

ஆனால் இன்று ஒரு சத்தத்தையும் காணவில்லையே! ஏன்? உங்கள் கண் முன்னால் எங்கள் அழிவுகள் காட்டப்பட்டால் மட்டுமா துடிப்பீர்கள்? சத்தமில்லாமல் சாட்சிகள் இன்றி சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோமே அது உங்கள் நெஞ்சங்களை நெருக்கவில்லையா? நாளை எங்கள் கதி என்னவாக போகின்றது என்று உங்கள் மனதுக்கு புரியவில்லையா? ஏன் மவுனித்து போனீர்கள்?

ஐநாவில் இலங்கைக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தார்கள் வெள்ளை இனத்தவர்கள். ஆனால் அந்த சட்டத்தையும் செல்லக் காசாக்கி விட்டார்கள் நெஞ்சிரக்கமில்லாத படு பாவி நாடுகள். அதற்கு இந்தியா அன்றிலிருந்து இன்று வரை துணை போகிறது. ஓரிரு குரல்கள் இந்தியாவிற்கு எதிராக தாய் தமிழகத்தில் எழுந்தன. பல முத்துக்குமாரார்கள் தன்னையே தியாகம் செய்துமே மதியாத இந்தியா இந்த கண்டனக் குரல்களை எப்படி கணக்கெடுக்கும்?

தமிழனின் உரிமைக்குரலும், தியாகங்களும் பாரத மாதாவிற்கு ஏன் இப்படி செல்லாக் காசாகி போனது? ஏன் என்றால் நாம் உறுதியில்லாதவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். நம் தாய் தமிழக உறவுகள் மீது எந்த நம்பிக்கையில் முத்துக்குமாரர்கள் உயிரை கொடுத்தார்களோ தெரியவில்லை. அவர்களின் விலை மதிக்க முடியாத உயிர்கள் போனதும், ஈழத்தில் நாம் செத்து மடிவதும் தான் வரலாற்றில் மிஞ்சப் போகிறதா?

அப்பாவி மக்கள் எங்களுக்கு ஒரு வழியும் தெரியவில்லை. உலகத்தை நம்பினோம். ஏமாற்றப்பட்டோம். தமிழக மக்களையும், கூடவே தமிழக தேர்தலை நம்பினோம். அதுவும் பொய்த்து விட்டது. ஐநாவை நம்பினோம். அங்கும் இந்தியாவின் கபட நாடகம் தான் அரங்கேரியிருகின்றது. இந்தியாவுக்கு சீனாவும் பாகிஸ்தானும் பகை நாடுகள். ஆனால் ஈழத்து தமிழனை அழிப்பதில் எல்லோரும் நேச நாடுகள். எங்கு போய் சொல்வது எங்கள் வேதனையை? கடவுள் கூட அதர்மத்துக்கு கூட்டாகி போய் விட்டார். தலைவர் இருக்கிறார் என்பதால் கொஞ்சம் மானத்தோடு வாழ்ந்தோம். அவரும் கொல்லப்பட்டு விட்டதாக அறிவித்தப் பின் நாயை விட கேவலமாகி போனோம். சிங்களவனில் பிச்சைக்காரன் கூட எங்களை ஏறி மிதிக்க போகிறான். ஆண்டியில் இருந்து அரசன்வரை எங்களை கேவலப்படுத்தப் போகிறான். வன்னியில் எங்கள் அழிவுகள் சாட்சியமில்லாமல் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் குட்டி தூக்கத்தில் இருந்து விழித்து தனது பொறுப்பை உணரும் போது, அங்கு எதுவுமே மிஞ்சப் போவதில்லை, எங்கள் நியாயங்களும் வெளியில் தெரியப்போவதில்லை.

மதிப்புக்குரிய ஐயா நீங்களும், வைகோ அவர்களும், திருமாவளவன் அவரகளும் மருத்துவர் ஐயா அவர்களும், வீரமணி அய்யா, சீமான் அவர்கள், சுபா வீரபாண்டியன் அவர்கள், மற்றும் இங்கு குறிப்பிடாத தமிழின பற்றாளர்கள் என்றுமே விடாது எங்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றீர்கள். எங்களுக்காக எத்தனையோ துன்பங்களை அனுபவித்தீர்கள். அதனையெல்லாம் இந்த அல்லல்படும் நெஞ்சங்கள் என்றும் மறக்கப் போவதில்லை. ஆனால் ஐயா அவலத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த பாவப்பட்ட தமிழினத்துக்கு உங்களின் பணி இன்னும் தேவை என்பது தாங்களுக்கு நன்றாகவே தெரியும்.

வீறு கொண்டு எழுந்த மாணவா சமுதாயம், சட்டத்தரணி சமுதாயம், திரைப்பட துறையினர் மற்றும் நம் மக்கள் எல்லோரும் மீண்டும் எழுந்து வாருங்கள். அடங்காத போராட்டம் நடத்தி எங்களை காப்பாற்ற வாருங்கள். மத்திய அரசின் இந்த தர்மமற்ற செயலை கண்டித்து தடுத்து நிறுத்துங்கள். தமிழனின் உறுதி, ஒற்றுமை, உணர்வு எல்லாம் உலகத்துக்கு தெரிய வேண்டும். எங்கள் ஒட்டுமொத்த தமிழ் மானம் காக்கப் படவேண்டும். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நாங்கள் அதாள பாதாளத்துக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதீர்கள். தமிழனின் புல் பூண்டு கூட ஈழத்தில் மிஞ்சப் போவதில்லை. மீண்டும் ஒரு அடிமை சாசனம் எழுதப்பட்டு கொண்டிருக்கிறது.

ஐயா அணி திரட்டுங்கள் எங்கள் மக்களை! அவர்கள் எங்களுக்காக நிச்சயம் பாசத்தோடும் உரிமையோடும் போராடுவார்கள். எங்களுக்காக உயிர் கொடுத்த முத்துகுமரன்களை தந்த இந்த தமிழக மண் எங்கள் துயர் துடைக்க பின் நிற்க மாட்டாது. ஆனால் அவர்கள் ஒற்றுமையான ஒரு தலைமையின் தூண்டுதலையும் அதன் வழிநடத்தலையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தலைமைகளின் ஒற்றுமை மேலோங்கும் போது மக்களின் ஒற்றுமையும் சீர்குலையாது. அவர்கள் போராட்டமும் வீறு கொண்டெழும். போராட்டம் வெற்றியும் பெறும்.

ஆவன செய்வீர்களா ஐயா? உங்கள் சொல் கேட்டு அணித்திரள எங்கள் தமிழின உணர்வாளர்கள் என்றும் பின் நிற்பதில்லை. தேர்தலுக்காக இடம் மாறினாலும் எங்கள் இன வெற்றியில் அவர்களுக்கு மாற்று கருத்துக்கள் இல்லை. தமிழின உணர்வாளர்களே கட்சி மறந்து, பேதங்கள் மறந்து தயவு செய்து தமிழின வெற்றிக்காக ஒன்று திரளுங்கள். தமிழ் மானம் காக்க ஒன்று திரளுங்கள். ஈழம் விடிய ஒன்று திரளுங்கள். எங்கள் கண்ணீர் துடைக்க ஒன்று திரளுங்கள். எங்கள் உரிமை வென்றெடுக்க ஒன்று திரளுங்கள். எங்களின் வாழ்வும் சாவும் தமிழ் உறவுகளே உங்கள் கைகளில் மட்டும் தான் இருக்கின்றது. வேறு யாரும் நமக்காக இங்கில்லை என்பது தான் நிதர்சனம்.

thanks to nerudal.com

Tuesday, May 26, 2009

தமிழக தலைமைகளின் போக்கு

தமிழக தலைமைகளின் போக்கு


கொடூரப் போரின் உச்ச வேதனைகளால் வெந்து துடித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழினத்துக்கு அய லில் "தொப்புள் கொடி" உறவுகளின் அரசியல் போக்குக் கண்டு அழுவதா, சிரிப்பதா என்ற இரண்டுங்கெட்டான் நிலை.

யுத்தத்தில் சீரழிந்த ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்து விடாமல்"காட்டிக் கொடுத்த" தமிழகத் தலை வர்கள், இன்று சொற்பகாலத்திற்குள்ளேயேதங்க ளுக்குக் கூடத் தாங்களே எதுவும் செய்ய இயலாதவர் களாக புதுடில்லியிடம் கைகட்டி நிற்கும் பரிதாபம் கண்டு பச்சாதாபப்படுவதைத் தவிர எமக்கு வேறு மார்க் கமில்லை.

நேற்று முன்தினம் வரையான ஐந்து ஆண்டு கால இந்திய மத்திய அரசின் ஆட்சியில் முக்கிய பங்கு வகித்தது தமிழகத்தின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம்.

ஆனால் இந்த ஐந்து ஆண்டு காலத்தில்தான் ஈழத் தமிழர்கள் மிகமோசமாக அடக்கி, ஒடுக்கப்பட்டு நசுக்கப்படுவதற்கு இந்திய மத்திய அரசு மறைமுகமா கப் பெருமளவில் துணைபோனது என்பது உலகறிந்த இரகசியம். அதைத் தடுக்கத் தவறி தடுக்க இயலா மல் அப்பெருங்குற்றத்தில் பங்காளியானது தி.மு. கவும் அதன் தலைமையும் என்பது ஈழத்தமிழரின் மனத் தாங்கல்.

அப்படித் துணை போயும் கூட தி.மு.க. தனக்குத் தன்னும் பயன்தரக் கூடிய உருப்படியான விடயங் கள் எதையாவது சாதித்ததா என்று பார்த்தால் தமிழகத் தில் தனது ஆட்சியைத் தக்க வைத்ததைத் தவிர அது வேறு எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் உண்மை.

யுத்தத்தில் சிக்குண்டு அவலப்பட்ட ஈழத்தமிழர் களைப் பாதுகாக்க மறுத்து, அவர்களுக்கு எதிராக சதி முயற்சியோடு செயற்பட்ட புதுடில்லி அரசுத் தலை மைக்குக் கண்ணை மூடிக் கொண்டு முண்டு கொடுத்த பெருந்தவறின் பெறுபேற்றை அனுபவிக்கும் வாய்ப்பு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் அவரது தி.மு.கவுக்கும் விரைவிலேயேகிட்டியிருக்கின்றது.

ஈழத் தமிழர்களின் பேரிழப்புக்களை முன்னிறுத்தி, இந்திய மத்திய அரசை அவ்விடயத்தில் ஒழுங்காகச் செயற்பட வைக்கத் தவறிய தி.மு.க. தலைமை, அவ் விடயத்தைப் புறந்தள்ளி விட்டு, தனது அரசியல் ஆதா யத்துக்காக, இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. தட்டிக் கேட்க வேண்டிய விடயத்தில் அப்படிக் கேட்கத் தவ றிய தி.மு.கவை, இப்போது தனது தேர்தல் வெற்றி உறு தியானதும் தூக்கி மூலையில் கடாசி விட்டது காங்கி ரஸ் கட்சி.


இந்திய மத்திய அரசின் அமைச்சுகள் ஒதுக்கீட்டில் தான் போடும் பிச்சையைப் பவ்வியமாகப் பெற்றுக் கொண்டு அடங்கிப் போகுமாறு கலைஞருக்கு புது டில்லியில் நல்ல சூடு கொடுத்து அனுப்பியிருக்கின்றார் சோனியா காந்தி.

இந்தக் கசப்பு மருந்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறார் கலைஞர். வால் பிடிக்கும் உதிரிக் கட்சிகளின் உதவியுடன் தனது மத் திய அரசு உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் தலைவி எண்ணுவதால் தி.மு.கவை உதாசீனப்படுத்தி உதைத் துத்தள்ளி விட்டார் அவர்.

ஆனால் கலைஞராலோ எது வும் செய்ய முடியாத நிலை. சீறிக் கொண்டு காங்கி ரஸ் உறவைத் துண்டித்து விட்டால் தமிழகத்தில் காங் கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 35 பேரின் தயவில் ஆளும் தமது சிறுபான்மை ("மைனாரிட்டி") அரசு கவிழ்ந்து விடும் ஆபத்து. அதனால் இந்திய மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்ற"விழுந் தும் மீசையில் மண்படவில்லையே!" என்பது போன்ற நிலைமையை அனுசரிக்க வேண்டிய விரக்தி நிலை கலைஞர் தரப்புக்கு.

ஈழத்தமிழர்களைக் கைவிட்டு, காங்கிரசுக்கு முண்டு கொடுத்த பாவத்திற்கு நல்ல படிப்பினைகள் இன்னும் பல அவருக்குக் காத்திருக்கின்றன.

தமிழக இந்திய அரசியல் விடயங்களில் மட்டுமல்ல, ஈழத் தமிழர் விவகாரத்தை ஒட்டிய நிலைப்பாட்டிலும் கூடத் தாங்கள் ஒரேகுட்டையில் ஊறிய மட்டைகள் தாம் என்பதை தமிழகத்தின் பிரபல அரசியல் தலை வர்கள் பலரும் நிரூபித்து நிற்கிறார்கள் என்பதே யதார்த் தமாகும்
-நன்றி-
http://www.pathivu.com/news/1957/54//d,view.aspx

தமிழ்நாட்டின் எதிர்காலம் நம்மால்தான் உருவாகும் :ராமதாஸ்

சென்னை: ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு சாதகமாக மோசடி செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறி அதை ஒரு மாடல் எந்திரம் மூலமும் 'விளக்கினார்' பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

பாமகவின் தலைமைப் பொதுக்குழு கூட்டம், சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. அதில் ராமதாஸ் பேசுகையில்,

எங்களை யாரும் எந்த காலத்திலும் எந்த நிலையிலும் வீழ்த்த முடியாது. நாங்கள் வீழ்வதற்காக பிறக்கவில்லை. வெல்வதற்காக பிறந்தவர்கள்.

ஆனாலும் சூழ்ச்சி, வஞ்சகம், துரோகம், தில்லுமுல்லுகள் போன்றவை முன்னால் நாங்கள் தோற்கடிக்கப்பட்டுவிட்டோம். அதுதான் உண்மை. பணத்தால் திமுக வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு என்று சொல்ல நாவு கூசுகிறது. குடிகார நாடு என்றே தமிழ்நாட்டை சொல்லலாம். புகை, சாராயத்தை ஒழிக்க நாம் பாடுபட்டோம். புகையிலை, சாராயம் உள்ளிட்ட `லாபி'கள்தான் ஆட்சியாளர்களை உருவாக்குவார்கள் என்ற பேச்சு உண்டு.

புகையிலை, சாராய தயாரிப்பாளர்களுக்கு அரசியல்வாதிகளும் துணை போயிருக்கிறார்கள். திமுககாரர்களுக்கு அவர்கள் கொடுத்த பணமும், திமுகவினரின் பணமும் நம்மை இந்த தேர்தலில் அழிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.

இளைஞன் சாராயக் கடையிலும், சினிமாவிலும் நிற்கிறான். நாடு, மொழி உணர்வு இல்லாமல் இருக்கிறான்.

தமிழக திட்டக்குழு அறிக்கைபடி, ஒருவனுடைய மாத வருமானம் ரூ.351. அப்படியானால் கால்வாசி பேர் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். விவசாயம் அழிந்துவிட்டது. விளைநிலம், ரியல் எஸ்டேட் தொழிலில் மனையாக மாற்றப்பட்டது. சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நிலங்களை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளுக்கு வாங்கித் தரும் புரோக்கராகத்தான் தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகாலமாக செயல்பட்டு வந்துள்ளது.

தமிழகத்தில் இதுபோன்ற மண்டலங்களைப் பற்றி யாருமே பேசவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய ஒரே பெண்மணி மம்தா பானர்ஜி. எனவே அவரது போராட்ட குணம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. மணல், அரிசி கொள்ளை தொடர்கிறது. இலவசங்களைக் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.


தமிழின பாதுகாவலர் என்றவர்கள் எல்லாம் தொலைக்காட்சி மூலம் பண்பாட்டை அழிக்கிறார்கள். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கிறார்கள். ஆனால், தமிழ் எங்கும் இல்லை. இது குறித்து என்னிடம் பொதுக்கூட்டத்தில் வாதிட திமுக தயாரா?. இனமானப் பேராசிரியர் வேண்டுமானாலும் வரட்டும்.

சமூக நீதியின் ஒட்டுமொத்த எதிரி காங்கிரஸ். 5 ஆண்டு காலத்தில் ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதற்கு என்னென்ன பாடுபட்டோம்?. எப்படியெல்லாம் அர்ஜுன்சிங் கேலி செய்யப்பட்டார்? `ஏய்ம்ஸ்' நிறுவன இயக்குனர் வேணுகோபாலை வைத்து என்னென்ன விளையாட்டுகளை விளையாடினார்கள். அன்புமணியை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்தினார்கள்?.

இந்தியாவிலேயே சமூக நீதிக்காக போராடக் கூடிய, வாதிடக் கூடிய ஒரே ஒரு ஆளை சொல்லுங்கள், என்னைத் தவிர. ஓ.பி.சி. விவகாரத்தில் திமுக செய்த துரோகங்களை பட்டியலிட எனக்கு இப்போது நேரமில்லை.

சமூக-பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு பாமகவைத் தவிர வேறு கட்சி இல்லை. 1949ல் திமுக தொடங்கப்பட்டது. 60 ஆண்டுகளாக ஏமாற்றிய கும்பலில் இருந்து தமிழக மக்களை நாம் விடுவிக்க வேண்டாமா? இவர்களை தோலுரித்து மக்களிடம் காட்டி, அரசியலில் இருந்து இவர்களை அப்புறப்படுத்தப் போகிறோமா, இல்லையா?. விடை கண்டாக வேண்டும்.

இழந்துவிட்ட பண்பாடு, மொழியை மீட்டெடுக்க, வலிமையுள்ள நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள்? இன்னும் நாம் போராட வேண்டும். ஒவ்வொருவரும் போராளியாகுங்கள். நமது பண்பாடு, மொழியை திட்டமிட்டு கண்ணெதிரே அழிக்கும் நாசகாரசக்திகளை எதிர்த்து போராட, அழிக்க நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

உங்களை பின்னிருத்தி நான் முன்னே சென்று போராடப் போகிறேன். நீங்கள் இருக்கும் தைரியத்தில் செல்வேன். தமிழ்நாட்டின் எதிர்காலம் நம்மால்தான் உருவாகும் என்ற உற்சாகத்தோடு செல்லுங்கள்.

திட்டமிட்டு சதி செய்து நம்மை தோற்கடித்துவிட்டார்கள். எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் விஞ்ஞானரீதியில் மோசடி செய்துவிட்டனர். இந்த இயந்திரத்தின் மூலம் எல்லா தொகுதியிலும் மோசடி செய்தால் தெரிந்துவிடும் என்பதற்காக நமக்கான 7 தொகுதிகள் உள்பட சில தொகுதிகளில் மட்டும் செய்தனர் என்ற ராமதாஸ்,

எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் எப்படி மோசடி செய்யலாம் என்பது பற்றி 'செயல்முறை விளக்கம்' அளித்தார். இதற்காக பாமகவே தயாரித்த எலக்ட்ரானிக் இயந்திரம் ஒன்றில் திமுகவின் உதயசூரியன், பாமகவின் மாம்பழம் உள்ளிட்ட சின்னங்கள் இருந்தன.

அந்த இயந்திரத்தில் நிருபர் ஒருவரை அழைத்து மாம்பழம் சின்னத்தில் 20 ஓட்டுகளை போடும்படி கூறினர். அதன்படி 20 ஓட்டுகள் போடப்பட்டன. யார் யாருக்கு எவ்வளவு ஓட்டுகள் விழுந்தன என்று எண்ணும்போது, உதயசூரியன் சின்னத்துக்கு 8 ஓட்டுகளும், மாம்பழம் சின்னத்துக்கு 12 ஓட்டுகளும் விழுந்ததாக இயந்திரம் காட்டியது.

இதைக் காட்டி ஒரு ஓட்டுகூட போடப்படாத உதயசூரியன் சின்னத்துக்கு எப்படி 8 ஓட்டுகள் வந்தன என்று ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் உள்ள புரோகிராமை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். மாலை 4 மணிக்கு மேல்விழும் ஓட்டுகள் எல்லாம் உதயசூரியன் சின்னத்துக்கு விழும்படி இயந்திரத்தில் புரோகிராமை அமைத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட சின்னத்துக்கு போடும் ஓட்டுகள் அனைத்தும் உதயசூரியன் சின்னத்துக்கு வரும்படியும் மாற்றலாம்.

ஓட்டு பதிவு செய்வதற்காக பட்டனை அழுத்தும் போது அங்கிருக்கும் அதிகாரிகள், குறிப்பிட்ட வயரை பிடுங்கிவிட்டு விடவும் வசதியுள்ளது. இதனால் சத்தம் மட்டுமே கேட்கும். ஆனால் ஓட்டு பதிவு ஆகாது என்று தானே உருவாக்கிய எந்திரத்தைக் காட்டி மனம்போன போக்கில் பேசினார் ராமதாஸ்.

முன்னதாக கூட்டத்தில், எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தை கைவிட்டுவிட்டு வாக்கு சீட்டு முறைக்கு மாற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது

Monday, May 25, 2009

இலங்கை ஆட்சியாளர்களை த‌ண்டி‌க்க இ‌ந்‌தியா ஆதரவு தரவே‌ண்டு‌ம் : ராமதாஸ்

இனப்படுகொலை நடத்தி போர் குற்றம் புரிந்துள்ள இலங்கை ஆட்சியாளர்களை விசாரணைக் கூண்டில் ஏற்றி தண்டிப்பதற்கு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நடைபெறும் விவாதத்திற்கு, இந்தியா முழு ஆதரவு தரவேண்டும்'' என்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் கூறியுள்ளார்.



WD

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாக கொலை செய்த இலங்கை ஆட்சியாளர்கள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் வலுப்பெற்று வருகிறது. அதற்கு முதல் படியாக இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றம் விசாரணை மேற்கொள்ள இருக்கிறது.

ஆயுத மோதல்களில் சிக்கி அப்பாவி மக்கள் துன்பப்படும் போது ஐ.நா. மனித உரிமை மன்றமும், உலக நாடுகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. மனித உரிமை மீறல்கள் எங்கே நிகழ்ந்தாலும் அங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கும், மனித உரிமை மீறலுக்கான போர்க் குற்றங்களுக்கு காரணமானவர்களை அவர்களின் நடவடிக்கைகளுக்கு பதில் சொல்ல வேண்டியதை உறுதிப்படுத்துவதற்கும், உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது உலக சமுதாயத்தின் கடமையாகும்.

அந்த வகையில்தான் ஜெர்மனி விடுத்த வேண்டுகோளை ஏற்று ஐ.நா. மனித உரிமை மன்றம் அவசரமாக கூட்டப்பட்டிருக்கிறது. கனடா, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, அர்ஜென்டினா, மெக்சிகோ, மொரிசியஸ், தென்கொரியா, சுவிட்சர்லாந்து, உருகுவே, சிலி உள்ளிட்ட 17 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த விசாரணையை தடுத்திடவும், அதன்மூலம் போர்க்குற்ற விசாரணை மற்றும் தண்டனையில் இருந்து தப்புவதற்கும் இலங்கை எதிர் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. மனித உரிமை மீறல் குற்றம் நிகழ்ந்திருக்கிறதா என்பது குறித்து விவாதிப்பதற்கு மாறாக இனிமேல் மனித உரிமைகளை பாதுகாத்திடவும், மேம்படுத்திடவும் இலங்கை அரசுக்கு நிதி உதவியும், இதர உதவிகளையும் அளிக்க வேண்டும் என்ற இலங்கையின் மாற்றுத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக கையெழுத்திட்டிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. இலங்கையின் துரோகத்திற்கு துணைபோயிருப்பது கண்டிக்கத்தக்கது.

போராளிகளுக்கு எதிரான போர் என்று உலகத்தை ஏமாற்றிக்கொண்டு இலங்கை போர்ப்படையினர் நடத்தியுள்ள இனப்படுகொலைக்கு அவர்கள் விலைகொடுத்தே ஆகவேண்டும். இது உலகத் தமிழர்களின் உணர்வாகும். இதை புரிந்துகொண்டு இலங்கைக்கு ஆதரவான நிலையை கைவிட்டு, இனப்படுகொலை நடத்தி போர்க்குற்றம் புரிந்துள்ள இலங்கை ஆட்சியாளர்களை விசாரணைக் கூண்டில் ஏற்றி தண்டிப்பதற்கு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நடைபெறும் விவாதத்திற்கு இந்தியா முழு ஆதரவு தரவேண்டும்.

தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வை இந்திய அரசுக்கு, தமிழக அரசும், முதலமைச்சரும் உணர்த்த வேண்டும். ஐ.நா. மன்றத்தில் விசாரணை முடிவதற்கு இன்னும் இரண்டு தினங்கள் இருக்கின்றன. இந்த கடைசி நேரத்திலாவது உலகத் தமிழர்கள் உணர்வை இந்திய அரசுக்கு எடுத்துச்சொல்லி ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்தியா கைவிட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சரின் முக்கியப் பணி இதுவாகத்தான் இருக்க வேண்டும்'' எ‌ன்று ராமதா‌‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திர மோசடியே தோல்விக்குக் காரணம் - பாமக

சென்னை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் விஞ்ஞான பூர்வமாக செய்யப்பட்ட மோசடியே பாமகவின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பாமக பொதுக்குழு இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் சென்னை காமராசர் அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.

தேர்தல் தோல்வி குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது திண்டிவனம் தொகுதி முன்னாள் எம்.பி. தன்ராஜ், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எப்படியெல்லாம் மோசடி செய்ய முடியும் என்பதை நிபுணர்கள் மூலம் விளக்கிக் காட்டினார்.

சிறிய வாக்குப் பதிவு இயந்திரத்தில் மாம்பழம், உதயசூரியன் உள்ளிட்ட நான்கு சின்னங்களை வைத்து ஒரு சின்னத்திற்கு மட்டும் ஓட்டுப் பதிவு செய்து அதை எண்ணும்போது அது உதயசூரியன் சின்னத்திற்கு போவது போல காட்டப்பட்டது.

கூட்டத்தில் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

- ஆளும் கட்சியின் பணப்பலம், அதிகார துஷ்பிர யோகம், அதிக அளவில் நடந்தது கண்டிக்கத்தக்கது.

- தோல்வியை கண்டு பா.ம.க. சோர்ந்துவிடாது. இதை வெற்றிக்கு படிக்கட்டுகளாக மாற்றுவோம்.

- வாக்கு சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

- நடத்தப்பட்டுள்ள முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு ஏற்க வேண்டும். முறைகேடுகளுக்கு இடமில்லாத வகையில் வாக்குப்பதிவு செய்ய மாற்று வழிமுறைகளை ஆராய வேண்டும்.

- பள்ளி, கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.

- இலங்கையில் இனப்படுகொலை துரோகத்துக்கு இந்திய அரசு துணைப்போவதை கண்டிக்கிறோம் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Thanks to thatstamil.com

Friday, May 22, 2009

தனி ஈழம் தான் ஒரே தீர்வு-ராமதாஸ்

சென்னை: தனி தமிழ் ஈழம் தான் தீர்வு. சிங்களர்களுடன் இனி தமிழர்கள் சேர்ந்து வாழ முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட எழுச்சி பேரணியில் கலந்து கொண்டு பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்,

இந்திய அரசு இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்க போவதில்லை. இனி, என்றுமே நாம் அதை அவர்களிடம் கேட்கப்போவதில்லை. அதனால் எந்த நன்மையும் இல்லை என்று நமக்கு தெரியும்.

இனி சர்வதேச சமுதாயம், சர்வதேச நாடுகள், ஐநா இவைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக தாய்த்தமிழகத்திற்கான நம்முடைய வேண்டுகோள் இருக்க வேண்டும்.

எம்.கே.நாராயணனும், சிவசங்கர் மேனனும் இலங்கைக்கு ஏன் சென்றிருக்கிறார்கள் தெரியுமா? இறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக சென்றிருக்கிறார்கள். ராஜபக்சேவை பாராட்டி இனிப்பு வழங்குவதற்காக சென்றிருக்கிறார்கள். இங்கே இருக்கிற தலைவர் இதற்காக டெல்லியில் உட்கார்ந்து கொண்டு எம்.கே.நாராயணனுடன் 15 நிமிடங்கள் பேசினார்.

தமிழர்கள் புலிகளாக மாறியிருக்கிறார்கள்...

உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் இன்றைக்கு புலிகளாக மாறியிருக்கிறார்கள். ஆக, இந்த போரின் மூலமாக நமக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றி , உலகத்தமிழர்கள் எல்லாம் இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்கள். அதே நேரத்திலே இங்கே தமிழீழத்தை தவிர, வேறு தீர்வு இல்லை என்பதை உலக மக்களுக்கு, உலக நாடுகளுக்கு சொல்லியாக வேண்டும்.

இங்குள்ள மார்க்சிஸ்ட் தோழர்களுக்கும் சொல்லியாக வேண்டும். இலங்கை இறையாண்மைதான் மிக முக்கியம் என்று பேசுவார்கள். சீனாவை கண்டிக்க அவர்கள் முன்வருவார்களா? வரமாட்டார்கள்.

அதே போல் மற்ற கட்சிகளுக்கும் சொல்கிறேன். விவாதங்களுக்கு நாங்கள் தயார். சிங்களவனும், தமிழனும் எந்த காலத்திலும் சேர்ந்து வாழ முடியாது என்பதற்கான காரணத்தை நாங்கள் சொல்கிறோம். தமிழீழத்தை நோக்கித்தான் நம்முடைய பரப்புரை இருக்க வேண்டும். தமிமீழத்தை அடைவதற்கான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும்.

பிரபாகரனை கொல்ல முடியாது...

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவரை யாரும் கொல்ல முடியாது. தமீழம் மலரும் வரையல்ல, அதனுடைய வளர்ச்சியை பார்த்து விட்டே அவர் இயற்கையான மரணத்தை தழுவுவார்.

இன்று இணையதளத்திலே வந்த தகவல்படி, புலிகளின் கடைசி நேர தாக்குதலில் 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். தலைவர், தளபதிகள் எவ்வாறு வெளியேறினார்கள் என்ற தகவலோடு வந்துள்ளது என்றார் ராமதாஸ்

Wednesday, May 20, 2009

மே 24ம் தேதி பாமக செயற்குழு கூட்டம்

தைலாபுரம்: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் , தனது தோல்விக்கான காரணங்களை ஆராய, வரும் மே 24ம் தேதி செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது பாமக

இது குறித்து பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கை:

பாமகவின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், மே 24ம் தேதி காலை 11 மணியளவில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பாமக நிறுவனர் டாக்ரடர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். எனது தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும்.

இக் கூட்டத்தில், கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி , எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், அணித் தலைவர் கள் கலந்து கொள்கின்றனர்.

இக் கூட்டத்தில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சி குறித்தும், எதிர்கால திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆலோசனை செய்யப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

'ஆ' வென வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருக்கும் கூட்டம் தான் தமிழர் கூட்டம்

சென்னை: "தமிழகம் உள்ளிட்ட உலகத் தமிழர்கள் எந்த சேனலைத் திருப்பினாலும், இணையத்தைத் திறந்தாலும் பிரபாகரன் மரணம் குறித்து, சிங்கள ஆதிக்க வெறியர்கள் தயாரித்துக் கொடுத்த செய்திகளே ஆக்கிரமித்திருக்க, அனைவரது கவனமும் வேடிக்கை மனப்பான்மையில் திளைத்திருக்க, வன்னியிலே ஓசையின்றி ஒரு பெரும் மனித அவலத்தை, இனப் படுகொலையை நடத்திக் கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம்", என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அதிர்ச்சி தகவல் தந்துள்ளன.

"புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில், ஆயிரக்கணக்கான உறவுகளைக் கொன்று தமிழின சுத்திகரிப்பை நிலை நிறுத்துவதே ராஜபக்சே மற்றும் அவரது ஆதரவு நாடுகளின் விருப்பமாக இருந்துள்ளது.

குறைந்தபட்சம் ஏன் என்ற கேள்வியைக் கூட எழுப்பாமல், கொடுக்கிற செய்திகளையெல்லாம் 'ஆ' வென வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருக்கும் கூட்டம் தான் தமிழர் கூட்டம் என முடிவுசெய்து, அவர்கள் கதைவிட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அரச பயங்கரவாதிகள் வன்னியில் அப்பாவி தமிழர்களை கொன்றழித்து வருவதாக", செவ்வாய் பின்னிரவில் வந்த செய்திகள் கூறுகின்றன.

மிச்சமிருக்கும் மக்கள் கொல்லப்படக் கூடாது என்பதற்காகவே ஆயுதங்களைக் கீழே போடுவதாக அறிவித்தனர் புலிகள் . சமாதானம் பேச வந்த மூத்த புலித் தலைவர்கள் சிலரை நயவஞ்சமாகக் கொன்ற ராணுவத்தினர், இப்போது கேட்க நாதியற்ற தமிழர் கூட்டத்தை புலிகள் என்ற சந்தேகத்தில் சுட்டுக் கொல்கிறார்களாம்.

போர் நிறுத்தப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறுகிறது. ஆனால் இன்னமும் பல ஆயிரம் மக்கள் பதுங்கு குழிகளுக்கு மேலே வரமுடியாமல் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறார்களாம். அவர்களில் தப்பி மேலே வருபவர்களை புலி என்ற சந்தேகத்தின்பேரில் கண்மூடித்தனமாக சுட்டுக் கொள்கிறார்கள் ராணுவத்தினர்.

வன்னியில் ராணுவம் போரை நிறுத்திவிட்டது என்பதே மிகப்பெரிய பொய் என்ற அதிர்ச்சித் தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. கடந்த இரு தினங்களும் மக்கள் 'பிரபாகரன் மரணத்தில்' மூழ்கிக் கிடக்க, அங்கே கோரத் தாண்டவம் ஆடியுள்ளது இலங்கை ராணுவம்.

இந்த திட்டமிட்ட இனப்படுகொலையை மக்கள் மற்றும் சர்வதேசத்தின் பார்வையிலிருந்து மறைக்கும் பொருட்டே பிரபாகரன் மரணம், உடல் கண்டெடுப்பு, கருணாவை வைத்து அடையாளம் காட்டல் போன்ற மோசடிகளில் இலங்கை அரசு இறங்கியுள்ளதாக புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Thanks to thatstamil.com

Saturday, May 16, 2009

பணம் பத்தும் செய்யும். பணம் பாதளம் வரை பாயும்.

இந்த முறை பாராளுமன்ற தேர்தல் 2009-ல் , பாட்டளி மக்கள் மக்கள் கட்சியில் போட்டியிட்டவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தனர். இதற்கு மிக முக்கிய காரணம் தி.மு.க-வின் பணபலமும், அதிகார பலமும் தான். பா.ம.க.வை எப்படியாவது தோற்க்கடிக்க வெண்டும் என்று கங்கணங்கட்டி , பணத்தை வாரி இரைத்து இருக்கிறார்கள், இந்த ஏழு தொகுதிகளிலும். பணம் 100-ல் இருந்து 500 வரை ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் கொடுத்து மக்களை பணத்துக்கு அடிமை ஆக்கி இருக்கிறார்கள். ஜனநாயகம் செத்து பணநாயகம் பிழைத்து இருக்கிறது,..

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்....இது உலகம் அறிந்த உண்மை.

Wednesday, May 13, 2009

பணநாயகம் தோற்று ஜனநாயகம் வெல்லும்-ராமதாஸ்

திண்டிவனம்: தமிழகத்தி்ல் திமுகவின் பணநாயகம் வெற்றி பெறாது. ஜனநாயகம் தான் வெற்றி பெறும். 40 தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என
பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

திண்டிவனம் நேரு வீதியில் உள்ள முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் மனைவி சரஸ்வதி, மகன் டாக்டர் அன்புமணி , மருமகள் செளம்யா ஆகியோருடன் வந்து ராமதாஸ் ஓட்டு போட்டார்.

பின்னர் நிருபர்களிடம் பேசுகையி்ல்,

திமுக தலைவர் கருணாநிதி மீள முடியாத ஒரு களங்கத்தை தமிழகத்துக்கு ஏற்படுத்தி விட்டார். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் 2வது இடத்தில் இருந்த தமிழகத்தை முதலிடத்துக்கு மாற்றி கறைபடிந்த வரலாற்றை ஏற்படுத்தியுள்ளார்.

ஆனால், பணநாயகம் வெற்றி பெறாது. ஜனநாயகம் தான் வெற்றி பெறும்.
40 தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக-காங்கிரசுக்கு மக்கள் தங்களது வாக்குகள் மூலம் பாடம் கற்பித்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் நல்ல முடிவை தருவார்கள். ஊழல்களின் மொத்த உறைவிடமே திமுக தான். கள்ள ஓட்டு போடுவதை உருவாக்கியதும் திமுக தான். திமுகவினர் விஞ்ஞான முறையில் சிந்தித்து ஊழலை செய்பவர்கள். இந்த விஷயத்தில் அவர்களுடன் யாரும் போட்டி போடவே முடியாது என்றார்.

ஓட்டளிக்க ரூ. 1000 கோடி பணம்...

அன்புமணி கூறுகையில், சுதந்திர இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத அளவுக்கு கடந்த 2 நாட்களாக ரூ.100 முதல் ரூ. 1000 வரை தமிழகத்தில் 4 கோடி வாக்காளர்களுக்கும் என ரூ. 1000 கோடி வரை பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறி வெட்ககேடான செயல்களில் ஈடுபட்டுள்ள திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்

Thanks to thatstamil.com

அழக் கூட திராணியில்லை: நார்வே தமிழர் கண்ணீர் பேட்டி

பெங்களூர் : தமிழர்களுக்கு எதிராக அனைத்து வகை ஆயுதங்களையும் பயன்படுத்தி மிகப் பெரிய தாக்குதலை தொடுக்க இலங்கை ஆயத்தமாகி வருகிறது. ஈழத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எங்களுக்கு யாரும் உதவவில்லை. அழக் கூட எங்களிடம் சக்தி இல்லாமல் போய் விட்டது என்று கண்ணீருடன் கூறுகிறார் நார்வேயில் வசித்து வரும் வி. தமிழன் என்கிற ஈழத் தமிழர்.

தற்போது 36 வயதாகும் தமிழன், 16 வயதாக இருக்கும்போது, தோணி மூலம் தமிழகத்திற்கு அகதியாக வந்து சேர்ந்தார். பின்னர் சில மாதங்கள் கழித்து நார்வே நாட்டுக்கு அகதியாக சென்றார்.

தற்போது நார்வேயில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களோடு இணைந்து, ஈழத் தமிழர்களின் அவலத்தைத் துடைக்க பல்வேறு போராட்டங்களில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
என்றாவது ஒரு நாள் குடும்பத்துடன் இணைவோம் என்ற நம்பிக்கையுடன் போராடி வருகிறார் தமிழன்.

மிட் டே இணையத்திற்கு அவர் இதுதொடர்பாக அளித்துள்ள உருக்கமான பேட்டி...

இங்கிருந்து பார்ப்பவர்களுக்கு இலங்கைப் பிரச்சினை குறித்து பேசுவது சுலபமானது. ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்பதை கற்பனை செய்து பார்த்தோமானால் மிகப் பெரிய துயர நிலை நமக்கு புரியும்.

இந்தக் காயங்கள், எங்களை விட்டு அவ்வளவு சுலபமாக போய் விடாது. ஒரு போதும் இந்த வடுக்கள் மறையாது. சர்வதேச சமுதாயமோ அல்லது மீடியாக்களோ இந்த மரணத்தை தடுத்து நிறுத்தத் தவறி விட்டன. இது சோகமான உண்மை.

இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து நாங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது. காரணம், அவர்கள் அவர்களது வாக்கு வங்கி குறித்து மட்டுமே கவலைப்படுகிறார்கள்.
ஆனால் இந்தியாவுக்கும், எங்களுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது என்று நாங்கள் எப்போதுமே நினைத்து வருகிறோம்.

ஆனால் கடந்த ஆறு மாதங்களாக அப்படிப்பட்ட உணர்வு இந்தியத் தலைவர்களிடமிருந்து வரவில்லை. தேர்தல் முடிந்தவுடன் இலங்கையை அனைவரும் மறந்து விடுவார்கள்.

கடந்த நாற்பது நாட்களாக தங்களது தேர்தல் கூட்டங்களில் பேசி வந்த ஈழப் பிரச்சினையை கிடப்பில் போட்டு விடுவார்கள்.

ஆனால் யாராவது ஒருவர் எங்களுக்காக எழுந்து வருவார், உதவிக் கரம் நீட்டுவார், குரல் கொடுப்பார் என்ற நம்பிக்கை இன்னமும் எங்களிடம் உள்ளது. அந்த நம்பிக்கையுடன்தான் நாங்கள் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் உள்ள எங்களது சகோதரர்கள் எங்கள் மீது பரிவுடன் இருக்கிறார்கள். துணிச்சலுடன் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

உலகம் முழுவதும் உள்ள எங்களது தமிழ் சகோதர, சகோதரிகளுடன் தொடர்பு வைத்திருக்கிறோம். நாங்கள் எங்கள் நிலத்தை விட்டு வெளியேறியபோது ஒரு நாள் அனைவரும் ஒன்று சேருவோம் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த கனவு இன்னும் கூட உயிருடன்தான் உள்ளது.

பல நாடுகள் எங்களது துயர நிலையை புரிந்து கொண்டு அனுதாபமாக பேசுகின்றன. நாங்கள் கூறுவதை கவனிக்கிறார்கள். தங்களது கவலையையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் இவற்றால் எல்லாம் இனப்போரை தடுத்து நிறுத்தி விட முடியவில்லை.
எங்களது வலிகளை உலக சமுதாயம் உணர வேண்டும்.

எங்களது மக்களைக் காக்க அனைவரும் முன்வர வேண்டும். ஏதாவது செய்து எங்களைக் காப்பாற்றுங்கள். உலக சமுதாயத்திலிருந்து எங்களைப் பிரித்துப் பார்க்காதீர்கள். எங்கள் ஒவ்வொருவரையும் தீவிரவாதி போல பாவிக்காதீர்கள்.

டிவியில் ஏகப்பட்ட நாடகங்களைப் பார்த்து நாங்கள் அலுத்துப் போய் விட்டோம். இப்போது எங்களது பெரிய பயமே, தமிழகத்தில் நடந்து வரும் தேர்தலை சாக்காக வைத்துக் கொண்டு இலங்கை அரசு பெரும் தாக்குதலைத் தொடுத்து மிச்சம் மீதி உள்ள தமிழர்களையும் அழித்து விடுமோ என்ற கவலைதான்.

விஷ வாயுக்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துமாறு ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிகிறோம். மீதம் உள்ள மூன்றரை சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் பிடித்த பின்னர் போரில் வென்று விட்டோம் என இலங்கை கூறலாம்.

இன்று உணவு கூட கிடைக்காத நிலையில் பரிதவித்து வரும் எங்களது மக்கள் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளும் துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.

16 வயதாக இருந்தபோது தமிழகத்திற்கு படகில் வந்தேன். பின்னர் நார்வே வந்து சேர்ந்தேன். தமிழர்களுக்காக இங்கு பல போராட்டங்கள் ஏற்பாடு செய்துவருகிறார்கள். அவற்றில் நானும் பங்கெடுத்து வருகிறேன்.

தமிழரின் துயரங்களை நார்வே மக்களுக்கும் எடுத்துச் சொல்லும் வகையில் வெளியிடப்படும் ஆவண உருவாக்கத்தில் நண்பருடன் இணைந்து பங்கெடுத்து வருகிறேன். ஆனால் இலங்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ என்பதை நினைத்தால் எனக்கு தூக்கமே வருவதில்லை.

இந்தப் பிரச்சினை முடியவே முடியாது. தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும். அகதிகள் முகாமில் உள்ள எந்த தமிழரையும் போய்க் கேளுங்கள், எந்த இந்தியரும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு துயரக் கதைகளை அவர்கள் சொல்வார்கள்.

ஷங்கர், மணிரத்தினம் ஆகியோரை விட மிகப் பெரிய சினிமாக்காரன் ராஜபக்சேதான். ஒவ்வொரு தமிழனையும் அவர் தீவிரவாதியாகவே சித்தரிக்க முயலுகிறார்.

எங்களுக்கு குரல் கொடுக்க எந்த மீடியாவும் இல்லை, எந்த உதவியும் இல்லை, மருந்தும் இல்லை,உணவும் இல்லை. ஏன், அழக் கூட எங்களிடம் சக்தி இல்லை என்றார் தமிழன்.

Thanks to Thatstamil.com

Tuesday, May 12, 2009

கருணாநிதியும் கொல்லைப்புறமாக வந்தவர் தான்-ராமதாஸ்

திண்டிவனம்: அன்புமணி யை பார்த்து கொல்லைப்புறமாக எம்.பி.ஆனார் என்று ஸ்டாலின் சொல்கிறார். முதல்வர் கருணாநிதி , கனிமொழி உட்பட பலரும் அப்படி பதவி பெற்றவர்கள் தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து திண்டிவனத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

அன்புமணி கொல்லைப்புறமாக எம்.பி. ஆனவர் என்று ஸ்டாலின் சொல்கிறார். அண்ணாதுரை, கருணாநிதி உட்பட பலரும் இவர் கூறியபடி பதவி பெற்றவர்கள் தான். ஏன் கனிமொழி எந்த புறமாக இப்போது எம்.பி.யாகி உள்ளார் என்பது ஸ்டாலினுக்கு தெரியாதா?

ஸ்டாலினுக்கு பொறாமை...

அன்புமணி யைப் பார்த்து ஸ்டாலினுக்கு பொறாமை. அன்புமணி போல் புத்திக்கூர்மை, நிர்வாகத் திறமை இல்லையே என்று இப்படி எல்லாம் பேசுகிறார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை. மின்சார வினியோகம் சரியாக இல்லை. எந்த அமைச்சருக்கும் நிர்வாக திறமை இல்லை.காமராஜர் எட்டு அமைச்சர்களை கொண்டு ஆட்சி செய்தார். அண்ணாதுரை ஒன்பது அமைச்சர்களை கொண்டு ஆட்சி செய்தார். கருணாநிதி 31 அமைச்சர்களை வைத்துக் கொண்டும் சரியாக ஆட்சி செய்யவில்லை.

திமுக வியாபார கட்சி...

முதல்வர் கருணாநிதி , பாமகவை வியாபார கட்சி என்கிறார். இந்திய அளவில் திமுக தான் வியாபார கட்சி. 1967ல் ஆரம்பித்து இதுவரை கொள்கை, கோட்பாடு இல்லாமல் கூட்டணிகளை மாற்றிக் கொண்டே இருப்பது திமுக தான்.

இந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வர மாட்டோமா என நினைத்து திமுக படுத்து விட்டது. இந்த தேர்தலில் திமுகவில் போட்டியிடுபவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள். அதனால் ஓட்டுக்கு ரூ. 500, ரூ. 1,000 கொடுக்கின்றனர். அவர்கள் எதை கொடுத்தாலும் வெற்றி பெற முடியாது என்றார் ராமதாஸ்.

Thanks to thatstamil.com

அதிமுக கூட்டணியினர் விழிப்புடன் இருக்க வேண்டும் - ராமதாஸ்

சென்னை: தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிகளில் அதிமுக கூட்டணிக் கட்சியினர் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை...

தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக மக்கள் மத்தியில் கோப அலை வீசிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மக்கள் மிகத் தெளிவான தீர்ப்பினை அளிக்க காத்திருக்கிறார்கள்.

கடந்த 5 ஆண்டு காலமாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியை தாங்கிப்பிடித்த பெரிய தோழமைக் கட்சிகளில் தி.மு.க. முக்கியமானது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாநிலத்தின் நலனுக்காகவும், தமிழினத்தைக் காப்பதற்காகவும், அதற்கு இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை போரை தடுத்து நிறுத்திட மத்திய அரசிடம் வலியுறுத்தி செயல்பட வைப்பதில் தி.மு.க. மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்போம் என்று நாங்களெல்லாம் உறுதியளித்தோம்.

ஆனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசை செயல்பட வைப்பதில் தி.மு.க. படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதை தமிழக மக்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழகம் தனது உரிமைகளை ஒவ்வொன்றாக இழந்து வந்திருக்கிறது. மாநிலத்தின் ஆட்சியையும், கூட்டணி உறவால் மத்தியில் கிடைத்த அதிகாரத்தையும் பயன்படுத்தி மாநிலத்தின் உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்ளவும், இழந்துவிட்ட உரிமைகளை மீண்டும் பெறவும் தி.மு.க. தலைமை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பவையெல்லாம் மக்களின் கோபத்தை அதிகரிக்க செய்திருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 2 தேர்தல்களில் தி.மு.க.வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சிகளையெல்லாம் தி.மு.க. தனது பெரியண்ணன் போக்கால் இழந்து தனிமரமாக நிற்கிறது. இப்போது துணை நிற்கும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தேடிக் கண்டுபிடிக்கும் நிலையில் உள்ளது.

1967-ம் ஆண்டு முதல் நமது மாநிலத்தில் நடந்து வந்துள்ள அத்தனை தேர்தல்களிலும் எந்த அணிக்கு கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையும், அவர்களது வாக்கு வங்கியும் அதிகமாக இருந்து வந்திருக்கிறதோ அந்த கூட்டணிதான் வெற்றி பெற்று வந்திருக்கிறது. பதவி காலத்தில் அளித்ததாக கூறி கொண்ட இலவசங்களும், மலிவான சலுகைகளும் வெற்றியை தேடித் தரவில்லை என்பது வரலாறு.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. அணியின் பக்கம், கூட்டணி கட்சிகளின் பலமும், வாக்கு வங்கியும் அதிகம் உள்ளது. எனவே புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அணி வெற்றி பெறப்போவது உறுதியாகிவிட்டது.

இந்த உண்மை தி.மு.க. கூட்டணிக்கு நன்றாக புரிந்துவிட்டது. எனவே, ஒரு மக்களவை தொகுதிக்கு 50 முதல் 100 கோடி ரூபாய் வரை செலவிட முடிவெடுத்து அதற்கான காரியங்களில் அதிகார வர்க்கத்தின் துணையோடு நடந்து கொண்டிருப்பதாக எல்லா இடங்களில் இருந்தும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

முன்பெல்லாம் இடைத்தேர்தல்கள் நடைபெறும்போது மட்டுமே அதிகார துஷ்பிரயோகமும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும் நடைபெறுவது வழக்கம். ஆனால், பாராளுமன்ற பொது தேர்தலில் பணம் கொடுத்ததாக வரலாறு இல்லை. அந்த புதிய வரலாற்றை ஆளும் வர்க்கத்தினர் ஏற்படுத்த தயாராகி விட்டார்கள்.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது சட்டப்படி குற்றம், ஜனநாயகத்திற்கு விரோதமானது, இதை தடுக்க வேண்டிய பொறுப்பும், வாக்காளர்களுக்கு உணர்த்த வேண்டிய கடமையும் அரசுக்கும், ஆட்சியாளருக்கும் உள்ளது. அந்த ஜனநாயக கடமையை ஆற்ற முதல்-அமைச்சர் கருணாநிதி முன்வர வேண்டும். தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமை; வாக்குரிமையை பணத்தால் விலைக்கு வாங்குவது சட்டவிரோதம். இந்த சட்ட விரோத நடவடிக்கையில் யாரும் ஈடுபடக் கூடாது.

பணம் கொடுத்தால் அதை வாங்காதீர்கள். ஜனநாயக உரிமையை விற்காதீர்கள் என்றும் இந்த சட்ட விரோத நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும், அவர்களை தயவு தாட்சண்யமின்றி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் வலியுறுத்தி அறிக்கை வெளியிட வேண்டும். அரசு செலவில் இதனை எல்லா நாளேடுகளிலும் விளம்பரமாக வெளியிட வேண்டும்.

ஆளும் கட்சியினரின் பணபலத்தையும், அடியாள் பலத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் முறியடிக்க அ.தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சி தொண்டர்கள் தயாராக வேண்டும்.

இத்தனை நாட்கள் ஆற்றிய தேர்தல் பணிகளைவிட மே 12 மற்றும் 13 தேதிகளில் ஆற்ற வேண்டிய பணிகள் தான் முக்கியம். வாக்கு சாவடிகளில் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் கள்ள ஓட்டு போட்டு விடுவார்கள்.

வழக்கமாக வாக்கு பதிவு முடிவடைகிற கடைசி மணி நேரத்தில்தான் கள்ள வாக்குகள் பெருமளவு பதிவாகும். இந்த தடவை வாக்கு பதிவு தொடங்குகிற முதல் ஒரு மணி நேரத்திலேயே கள்ள வாக்குகளை பதிவு செய்யும்படி ஆளும் கூட்டணியினருக்கு ரகசியமாக ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. வாக்கு சாவடிகளில் பணியாற்றுகின்ற அரசு அலுவலர்கள் இந்த முறைகேட்டிற்கு துணை போக கூடாது.

அரசு ஊழியர்களும், காவல்துறையினரும் தங்களது கடமையை நடுநிலையாகவும், முறையாகவும் செய்ய வேண்டும். அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் வெற்றி கனியை அளிக்க காத்திருக்கிறார்கள். அதனை எதிரிகள் தட்டிப் பறித்துச் சென்று விடாமல் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தொண்டர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Thanks to thatstamil.com

Monday, May 11, 2009

திமுக-காங்கிரசுக்கு எதிராக கோப அலை-ராமதாஸ்

திருவண்ணாமலை: திமுக கூட்டணிக்கு எதிராக தமிழகத்தில் கோப அலை வீசி வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,

கடந்த 3 வாரக்காலமாக நான் 39 மக்களவை தொகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்திருக்கிறேன். மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான ஒரு எதிர்ப்பு அலை, கோப அலை வீசுவதை என்னால் உணர முடிந்தது.

மின்வெட்டு, விலைவாசி உயர்வு, ஆளும் கட்சியினரின் அராஜகம், கட்டப்பஞ்சாயத்து, அப்பாவிகளிடமிருந்து நிலம் பறிப்பு, மணல் கொள்ளை, அரிசி கடத்தல், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை ஆகியவற்றுடன் இனப் படுகொலைக்கு ஆளாகிவரும் இலங்கைத் தமிழர்களை காக்கக் தவறியிருப்பதுடன், அவர்களுக்கு திமுகவும், காங்கிரசும் சேர்ந்து செய்த துரோகமும் கபட நாடகங்களும் மக்களின் கோபத்திற்குக் காரணமான அடிப்படை அம்சங்கள்.

எனவே, இந்தத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மக்கள் மிகத் தெளிவாக தீர்ப்பினை அளிக்கக் காத்திருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டு காலமாக மத்திய அரசை தாங்கிப்பிடித்த பெரிய கட்சிகளில் திமுகவும் ஒன்று.

மாநிலத்தின் நலனுக்காகவும், ஈழத்தமிழர்களை காப்பதற்காகவும், அங்கு நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்காகவும் மத்திய அரசை வலியுறுத்தி செயல்படச் செய்ய திமுக மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்பதற்கு சிறிய கட்சிகள் எல்லாம் உறுதியளித்தோம்.

அதைப் பயன்படுத்தி மத்திய அரசை செயல்பட வைப்பதில் திமுக தோல்வியடைந்திருக்கிறது என்றும், காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்திருக்கிறது என்றும் மக்கள் தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது சட்ட விரோதமானது. பணம் வாங்காதீர்கள் ஜனநாயக உரிமையை விற்று விடாதீர்கள் என்பதை வலியுறுத்தி கருணாநிதி அறிக்கை வெளியிட வேண்டும்.

தேர்தல் விதிமுறைகளை மீறி பல விளம்பரம் செய்யும் அவர் இந்த வேண்டுகோளை அரசு செலவில் விளம்பரம் செய்ய முன் வரவேண்டும்.
பணம் கொடுப்பவர்கள் ஆளுங்கட்சியினராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என 3 முறை சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசின் அதிகாரபீடம் காலில் போட்டு மிதித்துள்ளது. இந்திராவின் மருமகளே, தாயே இலங்கையில் போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று கெஞ்சி கூத்தாடுவதைத் தவிர திமுக தலைவர் கருணாநிதி எதையும் செய்யவில்லை.

தமிழ் ஈழத்தை அமைக்க பாடுபடுவேன் என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு உலகத்தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது, இங்குள்ள தமிழர்கள் மத்தியிலும் பெரிதும் வரவேற்கப்படுகிறது. ஜெயலலிதா அறிவித்து விட்டார். எனவே நாமும் சொல்லி வைப்போம் என்ற தோரணையில் கருணாநிதியும் தமிழ் ஈழம் அமைய முயற்சிக்கப் போவதாகக் கூறியிருக்கிறார்.

கருணாநிதி பேசுவார், சொல்லுவார், ஆனால் செய்யமாட்டார். ஜெயலலிதா ஒன்றைச் சொன்னால் செய்து முடிப்பார். இதை மக்கள் நம்புகிறார்கள்.

கடைசி அரை மணி நேரத்தில்தான் கள்ள ஓட்டு விழும். ஆனால் இந்த தேர்தலில் வாக்கு பதிவு தொடங்கும் 1 மணி நேரத்தில் திமுகவினர் கள்ள ஓட்டு போட ஆணை பிறப்பித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதற்கு அரசு அதிகாரிகள் துணை போக கூடாது என்றார்

Thanks to thatstamil.com

Saturday, May 9, 2009

ஒரே இரவில் 2000க்கும் மேற்பட்டோர் பலி

முல்லைத்தீவு: இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் நேற்று இரவு முழுவதும் இலங்கை ராணுவம் மிகக் கொடூரமான முறையில் பீரங்கித் தாக்குதலை நடத்தியது. இதில் 2000 அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர்.
பல ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். அந்தப் பகுதியே ரத்த வெள்ளமாக காணப்படுகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான முறையில், மிகக் கொடூரமான முறையில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. சகல விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை இலங்கை ராணுவம் நடத்தியிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பு வளையம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று இரவு 7 மணிக்கு இலங்கைப் படைகள் தங்களது பீரங்கித் தாக்குதலை தொடங்கின.

பீரங்கிகள் மட்டுமல்லாமல், தங்களிடம் உள்ள அனைத்து விதமான கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தி வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது இலங்கை ராணுவம்.

இதில் பதுங்கு குழிக்குள் மறைந்து கொண்ட அப்பாவித் தமிழர்கள் கொத்து கொத்தாக உயிரிழந்தனர். தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்த பலர் தூங்கிய நிலையில் பிணமானார்கள்.

பல உடல்களை எடுக்க முடியாத அளவுக்கு மண்ணுக்குள் புதைந்து போய் விட்டது. காயமடைந்தவர்கள் எங்கும் செல்ல முடியாமல் ஆங்காங்கே விழுந்து கிடக்கிறார்கள். காப்பாற்றுங்கள் என்று கோரி அவர்கள் அழுது புலம்பும் காட்சி இதயமற்றவர்களையும் இளக வைக்கும் வகையில் உள்ளது.

சாலைகள் அனைத்திலும் பிணங்களாக காணப்படுகின்றன. அவற்றை அப்புறப்படுத்தக் கூட முடியாத அளவுக்கு இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இன்று காலை வரை 1,112 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் படிப்படியாக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தாக்குதல் தொடர்ந்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் இயங்கும் தற்காலிக மருத்துவமனைக்கு காயமடைந்த நிலையில் 814 பேர் இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில் 112 சிறுவர்களும் அடங்குவர்.

மருத்தவமனைக்கு கொண்டுவரப்பட்ட 257 உடல்களில் 67 பேர் சிறுவர்கள்.

ராணுவத் தாக்குலில் நட்டாங்கண்டல் மருத்துவமனையும் பெரும் சேதத்தை சந்தித்திருக்கிறது. இதனால் சிகிச்சை பெறவும் வழியில்லாத நிலை உருவாகி வருகிறது.

போரை நிறுத்த வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். இதையடுத்து இந்திய அரசு இலங்கை அரசுடன் பேசியது. இதைத் தொடர்ந்து கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறினார்.

இதையடுத்து போர் ஓய்ந்து விட்டது என முதல்வர் கருணாநிதியும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கூறினார்கள். கருணாநிதியும் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

ஆனால் எந்த வகையான ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். அதை யாரும் தடுக்க முடியாது என சில நாட்களுக்கு முன்பு கோத்தபாய ராஜபக்சே கூறியிருந்தார். மேலும், தமிழர்கள் மீது ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி மொத்தமாக அழிக்க இலங்கை திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், விடிய விடிய பீரங்கிகள் மற்றும் சகல விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தி 2000க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறது இலங்கை ராணுவம்.

Thanks to thatstamil.com

Friday, May 8, 2009

கலைஞர் நடத்திய காகிதப்பூ நாடகம்

உண்ணாவிரதம் என்ற கடினமான போராட்டத்தில் நாம் இன்று ஈடுபடுகிறோம். துப்பாக்கி தூக்குவது மிகவும் எளிது. உண்ணாநிலைப் போரில் கொஞ்சம்கொஞ்சமாக நாம் நம்மை அழித்துக்கொண்டு, அங்குலம் அங்குலமாக மரணத்தை நோக்கி நகர் வதைவிட, காவல் துறையின் குண்டுகளுக்கு பலியாவதும், தூக்குக் கயிற்றில் தொங் குவதும் சிரமமற்றசெயல். உண்ணாநிலைப் போரில் ஈடுபட்டுவிட்டுப் பின்வாங் குவது புரட்சியாளனுக்குப் பெருமை சேர்க்காது.

அதைவிட முதலிலேயே உண்ணாநிலையில் இறங்காமல் இருந்துவிடலாம்…’ - என்று பகத்சிங்கின் தோழர்களை எச்சரித்தவன் யதீந்திரநாத் தாஸ். அறுபத்துமூன்று நாட்கள் மருந்து உட்பட எதையும் ஏற்காமல் மறுதலித்து உயிர் துறந்த மாவீரன் அவன்.

‘தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களர் தடுக்கப்பட வேண்டும்; தமிழீழப் பகுதியில் சிங்களர் காவல் நிலையங்கள் கூடாது; வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் இடைக்கால

நிர்வாகம் விடுதலைப்புலிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்; சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்; தமிழர் வாழும் பகுதிகளில் ராணுவ முகாம்கள் மூடப்பட வேண்டும்’ என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இராசையா என்ற திலீபன், யாழ்ப்பாணம்நல்லூர்கந்தசாமி கோயில் திடலில் தண்ணீரும் அருந்தாமல் 12 நாள் உண்ணா நிலைப் போர் நடத்தி உயிர்நீத்து, ஈழப் போராளிகளின் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்தான்.

தமிழகத்தின் ஆட்சி நாற் காலியை அலங்கரிக்கும்கலைஞர், அண்ணா சமாதியில்யாரை எதிர்த்து அரை நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்? ‘இலங்கை அரசு வாங்கிய பலிகளிலே ஒரு பலியாக நானும் அமைய இந்த உண்ணாநோன்பை மேற் கொண்டிருக்கிறேன்’ என்று அவர் அறிவித்ததற்கு என்ன அர்த் தம்? பல்லாயிரம் தமிழர்களை பலிவாங்கிய ராஜபக்ஷே அரசைக் கடுமையான மொழியில் கண்டிக்காமல், புழுக்கத்தோடு புலம்புவதா தமிழகத்தின் உரிமைக்குரல் கொடுக்கும் தனிப்பெரும் தலைவரின் போர்ப் பரணி?

பதினெட்டு முறை உண்ணாநோன்பிருந்து, ஒவ்வொரு முறையும் கோரிக்கை நிறைவேறிய பின்பே அந்த அகிம்சைப் போரை நிறுத்தியவர் அண்ணல் காந்தி. அவரேகூட, ‘என்னை நேசித்தவர்களைச் சீர்திருத்தவே நான் உண்ணாநோன்பை மேற்கொண்டேன். என்னை நேசிக்காத, என்னுடைய எதிரியாகக் கருதிய தளபதி ஜெனரல் டயரைச் சீர்திருத்துவதற்கு நான் உண்ணாநோன்பிருக்க மாட் டேன்!’ என்றார். ஒருவேளை, கலை ஞரும் ராஜபக்ஷேவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்காமல்… தான் மிக அதிகமாக நேசிக்கும் ‘சொக்கத் தங்கம்’ சோனியாவையும், மன்மோகன் சிங்கையும் சீர்திருத்தும் நோக்கோடுதான் காந்திய வழியில் அரை நாள் தியாகத்தை அரங்கேற்ற முடிவெடுத்தாரோ?

இந்த உண்ணாவிரதத்துக்கு பலன் இருக்கும் என்று கலைஞர் முழுமன தாக நம்பியிருப்பாரேயானால்… அதுவும்கூட மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்திருந்தால்… எத்தனை குழந்தைகள் பிழைத்திருக்கும்… எத்தனை குடும்பங்கள் தழைத் திருக்கும்… எவ்வளவு ஆண்களும் பெண்களும் சாவுப் பள்ளத்தில் சரிந்துவிழாமல் ஈழ நிலத்தில் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்கள்! பாழாய்ப் போன நாடாளுமன்றத் தேர்தல், மூன்று மாதங்களுக்கு முன்பே வந்திருக்கக்கூடாதா?

இதற்கும்தான் எவ்வளவு விளம்பரம்; எத்தனை ஆர்ப்பாட்டம்! புலர்காலைப் பொழுதில் அண்ணா சமாதியில் கலைஞர் தன் உயிரை பலியிடும் முடிவோடு(!) உண்ணாநோன்பில் உட்கார்ந்தார். தொண்டர்கள் கூடினர். தலைவர்கள் திரண்டனர். உண்ணாநோன்பைக் கைவிடும்படி அவர்கள் உயிர் உருகக் கதறியபோதும் கலைஞர் அசைந்து கொடுக்கவில்லையாம். மருத்துவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் அறிவுறுத்தியபடி கலைஞர் கட்டிலில் கால் நீட்டிப் படுத்தார். உண்ணாநோன்பு உக்கிரமான சூழலை நெருங்கியதாம்! ப.சிதம்பரம் தொலைபேசியில் தொடர்புகொண்டாராம். ஆறு மணி நேர உண்ணாநோன்பில் ராஜபக்ஷே அச்சத்தின் மடியில் விழுந்துவிட்டதாகவும், அலறியடித்துப் போரை நிறுத்திவிட்டதாகவும் செய்தி சொன்னாராம். தன் ஆற்றல் முதல்வருக்கு அப்போது உடனே புரிந்துவிட…

படுக்கையிலிருந்து கலைஞர் எழுந்தார். ‘இலங்கை அரசு போரை நிறுத்திவிட்டது’ என்று பிரகடனம் செய்தார். ஈழத் தமிழினம் ஒரு வழியாக உயிர் பிழைத்ததறிந்து அவரைச் சுற்றி வாழ்த்தொலிகள், ஜெய கோஷம்! ‘சர்வதேச நாடுகள் சாதிக்க முடியாததை ஒரு தனி மனிதர் சாதித்தார்’ என்று ‘வீரமணி’களின் புகழாரம்; திருமாக்களின் தேவாரம்! உலக வரலாற்றில் இவ்வளவு விரைவாக எந்த உண்ணாநோன்பும் வெற்றி பெற்றதில்லை. புன்னகையுடன் கலைஞர் கோபாலபுரம் நோக்கி காரில் பறந்தார். உண்ணாநோன்பு ‘வெற்றி’க்குப் பின்பு இருபது நிமிடங்களில், முல்லைத்தீவின் பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் ராணுவத்தின் முப்படைத் தாக்குதல்களில் 272 அப்பாவித் தமிழர் அழிந்துபோயினர். ‘தீவிரவாதி களை ஒழிக்கும் செயலில் ராணுவத்துக்கு வெற்றி நெருங்கி வந்திருக்கும் நிலையில், நாங்கள் எங்கள் நடவடிக்கைகளில் இருந்து ஓயப்போவதில்லை’ என்ற ராஜபக்ஷேவின் ஆணவக் குரல் உலகின் காதுகளில் விழுந்தது.

கலைஞரும், ‘மழை நின்றுவிட்டது; தூவானம் தொடர்கிறது’ என்று கவித்துவத்தோடு பேட்டி கொடுக்கிறார். கொத்துக் குண்டுகளை நம் சொந்த சகோதரர்களின் குடும்பங்கள் மீது தொடர்ந்து வீசுவதை முல்லைத்தீவுப் பகுதியில் செயற்கைக்கோள் மூலம் படமெடுத்து ஐ.நா. சபை வெளியிட்டது. அது கலைஞருக்கும், ப.சிதம்பரத்துக்கும் குளிர் மழையாகத் தெரிகிறதா? ‘ஒருவர் செத்தால் ஊர் சுமக்கும். ஊரே செத்தால் யார் சுமப்பார்…’ என்ற அதீத அவலம்!

‘கடைசிச் சொட்டு ரத்தம் உள்ளவரை நாட்டின் சுதந்திரத்தைக் காப்போம்’ என்று ஒருவர் சொன்னதும், ‘கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும்போது ஒருவன் செத்துவிடுவானே. அவனால் எப்படி சுதந்திரத்தைக் காக்க முடியும்?’ என்றார் பெர்னார்ட்ஷா. கலைஞர் பேசுகிற அலங்கார வார்த்தைகளும் இந்த வகைதான்.

‘மார்க்சிஸ்ட் கட்சியினர் இலங்கை இறையாண் மைக்கு உட்பட்ட அரசியல் தீர்வு அமையவேண்டும் என்கிறார்கள். என் கருத்தும் அதுதான்’ என்கிறார், நேற்று தமிழீழம் கேட்டுக் கலிங்கத்துப்பரணி பாடிய கலைஞர்! ‘வள்ளித் திருமண’ நாடகத்தில் வேலனாக நடிப்பவரே, அடுத்து வேடத்தை மாற்றி விருத்தனாக நடிப்பது போல்… இந்த ‘இலங்கேஸ்வரன்’ நாடகத்தில் கலைஞர் எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடிப்பார்.

சிங்களம் ஆட்சிமொழி, பௌத்தம் அரச மதம், சிங்களர் மட்டுமே ஆளப் பிறந்தவர் என்று பேசும் காடையர்களோடு தமிழர் கலந்து வாழ்வது சாத்தியமா? சொந்த மண்ணிலேயே அகதிகளாக நிறுத்தி… ஓர் இன அழிப்புப் போரை ‘பயங்கரவாத அழிப்பு’ என்ற போர்வையில் திட்டமிட்டு நடத்தும் சிங்கள மனநோயாளிகளுடன் இனியும் தமிழர், இறையாண்மைக்கு உட்பட்டு இணைந்து வாழக் கூடுமா?! தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கொசா வாவுக்கும், இந்தோனேஷியாவிலிருந்து விடுபட்ட கிழக்கு தைமூருக்கும் ஒரு நீதி; ஈழத் தமிழருக்கு ஒரு நீதியா?!

கிழக்கு பாகிஸ்தானில் 1971-ம் ஆண்டு முப்பது லட்சம் வங்காளிகள் கொல்லப்பட்டனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட வங்காளிகள் இந்தியாவுக்குள் அகதிகளாக வந்தனர். ஒரு முகாமில் மட்டும் முப்பதாயிரம் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டனர். மனித உரிமைகள் காற்றில் பறந்தன. இந்திய ராணுவம் நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்திரா காந்தியின் தயவால் புதிய வங்க தேசம் தனி நாடாகப் பிறந்தது. பாகிஸ்தான் இரண்டாகப் பிரிவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததாக இருந்தது. சோனியாவின் வழிகாட்டுதலில் இயங்கும் மன்மோகன் அரசு இந்திய நலனுக்காகவே இலங்கைத் தீவு ஒன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறது.

ஈழப்பிரச்னை ஓர் இனப் பிரச்னை. ஆனால், அது இங்குள்ள காங்கிரஸ்காரர்களால் பயங்கரவாதப் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஈழத்தமிழரின் அரசியல் நியாயங்கள் அனைத்தும் ராஜீவ் காந்தி படுகொலையைக் காட்டிப் புறக்கணிக்கப்படுவது எந்த வகையில் நியாயம்? ‘சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காமல் செம்மை மறந்த’ ப.சிதம்பரம் போன்றவர்கள், ‘யார் முத்துக்குமார்?’ என்று ஏளனக் குரலில் கேட்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைப் போன்றவர்கள், ஈழப்பிரச்னை ஒரு பிரச்னையே இல்லை என்று சொல்லும் கே.வி.தங்கபாலுவைப் போன்றவர்கள், தமிழகத் தேர்தல் களத்தில் கலைஞரின் குடைநிழலில் வெற்றிக் கனவுகளோடு நிற்கிறார்கள்!

அவர்கள் கனவை வெற்றுக் கனவாக்க வேண்டியது, தமிழரின் முதற் கடமை. ‘ஈழப்பிரச்னையில் கடுகளவு பாதிப்பும் ஏற்படாது!’ என்று கட்டியம் கூறும் கலைஞரின் வேட்பாளர்களை விலாசமற்றவர்களாக மாற்றுவது வாக்காளர்களின் இரண்டாவது கடன். இவர்களுக்குத் தரும் தோல்வியின் மூலமே புதுடெல் லிக்கு தமிழனின் உண்மையான உணர்வு, புத்தியை புகட்ட முடியும்.
ரோமாபுரியின் செனட்டராக இருந்த டேசிடஸ், ‘A bad peace is even worse than war’ என்றதுதான் ப.சிதம்பரத்தின் பேச்சையும், என்றும் மணக்காத கலைஞரின் காகிதப் பூ நாடகக் காட்சிகளையும் காணும்போது நெஞ்சில் நிழலாடுகிறது. வின்ஸ்டன் சர்ச்சில் எதற்கும் நேரடியாக பதிலளித்ததில்லை. ஒருவர் அவரிடம், ‘இப்போது மணி என்ன?’ என்றார். உடனே சர்ச்சில், ‘உங்கள் கடிகாரத்தில் மணி என்ன?’ என்று கேட்டார். ஈழத்தமிழர் விவகாரத்தில் கலைஞர், சர்ச்சிலைப் போல் சாமர்த்தியம் காட்டுகிறார். ‘ஒரு ராஜதந்திரி தன் அதிகபட்ச ராஜதந்திரத்தாலேயே அழிவைத் தேடிக் கொள்கிறான்’ என்பதை, கலைஞருக்கு விரைவில் காலம் கற்றுக் கொடுக்கும்!

Thanks to http://www.nerudal.com/nerudal.4872.html

தனி ஈழம்-'சோனியா மேடையில் அறிவிப்பாரா கருணாநிதி?:- ராமதாஸ்

தர்மபுரி: இலங்கையில் தனி ஈழத்தை அமைத்தே தீருவேன் என்று இப்போது கூறும் கருணாநிதி 10ம் தேதி சென்னையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் வைத்துக் கொண்டு இதைச் சொல்லத் தயாரா, அதே போல தனி ஈழம் அமைப்பேன் என்று சோனியாவையும் அறிவிக்கச் செய்வாரா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

மருத்துவமனையில் இருந்து கொண்டு தனி ஈழம் அமைப்பது என் பொறுப்பு என்று முதல்வர் கருணாநிதி கூறுகிறார். இதை வரவேற்கிறோம். ஆனால், 10ம் தேதி சோனியா காந்தியுடன் ஒரே மேடையில் பேசும்போது, நான் தனி ஈழத்தை அமைத்தே தீருவேன் என்று கருணாநிதி முழங்குவாரா.. அவ்வாறு பேசத் தயாரா?.

அதே போல அதே மேடையில் தனி ஈழம் அமைப்பேன் என்று சோனியாவையும் பேச வைப்பாரா?. அதற்குத் தேவையான நெருக்கடியை கருணாநிதி கொடுப்பாரா?.

1983ம் ஆண்டிலிருந்தே இலங்கை விஷயத்தில் தவறான கொள்கையை கடைபிடித்து வந்தவர் கருணாநிதி. அதையே இப்போதும் தொடரப் போகிறாரா? அல்லது உண்மையிலேயே அன்புச் சகோதரி ஜெயலலிதா அறிவித்ததைப் போல தனி ஈழம் அமைக்கப் பாடுபடப் போகிறாரா?.

எனக்கு என்னவோ தனி ஈழம் விஷயத்தில் கருணாநிதியின் பேச்சு சந்தேகமாகே உள்ளது. ஆனால், ஜெயலலிதா விஷயத்தில் அவரது பேச்சை நம்புகிறேன். அவர் சொன்ன சொல்லை காப்பாற்றுவார். கருணாநிதி ஏமாற்றுவார்.

இப்போது தேர்தலை எதிர்கொள்ள கருணாநிதிக்கு கைவசம் உள்ள ஒரே ஆயுதம், தனி ஈழம் அமைப்பேன் என்று அறிவிப்பது தான். அதைத் தான் அவர் பயன்படுத்தி நாடகமாடி வருகிறார்.

நாங்கள் வலியுறுத்தி வருவதுபோல, இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி ஈழத்தை பெற முயற்சிப்பாரா? ஈழத்தை பெற முயற்சிப்பது எந்த வகையில் என்பதை கருணாநிதி அறிவிக்க வேண்டும். இவரது முயற்சிக்கு அவரது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்குமா?

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்காக பாமக பல போராட்டங்களை நடத்தியது. அது பயனற்று போனதால் உச்சமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றம் அதை நிறைவேற்ற உத்தரவிட்டது.

இந்த நிலையில்தான் கருணாநிதி, கர்நாடகாவில் தேர்தல் நடப்பதால் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தன்னிச்சையாக அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மிரட்டலுக்கு பயந்தே அதை கிடப்பில் போட்டார். ஆனால், அதே நேரத்தில் கர்நாடகாவில் தொடங்கப்பட்ட பெங்களூர் கூட்டு குடிநீர் திட்டத்தை அங்கு செயல்படுத்தி விட்டார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் திமுகவை காங்கிரஸ் கட்சி கைகழுவி விடும். அதற்கான அறிகுறி இப்போதே தென்படுகிறது. இது ராகுல்காந்தி கூறிய கருத்தில் இருந்தே புலப்படுகிறது.

அப்படி ஒருநிலை வந்தால் திமுக, பாஜக வசம் போய்விடும். திமுகவுக்கு கொள்கை, கோட்பாடு கிடையாது. எந்த கட்சியுடனும் கூட்டு வைப்பார்கள். எந்த கூட்டணி அரசிலும் இடம் பெறுவார்கள். ஆனால், மற்றவர்களை பார்த்து மட்டும் சந்தர்ப்பவாதிகள் என பேசுவார்கள். ஆனால், சந்தர்ப்பவாதத்தின் மறுபெயர்தான் திமுக என்பது எல்லோருக்கும் தெரியும்.

தற்போது ராகுல்காந்தியின் அறிவிப்பால் திமுக-காங்கிரஸ் சோர்ந்து போய்விட்டன.

அன்புமணி ராமதாஸ் கொல்லைப்புறமாக பதவிக்கு வந்து விட்டார் என ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்திருந்தால் அவர் என்றைக்கோ முதல்வர் ஆகியிருக்க முடியும் என்றார் ராமதாஸ்.

Thanks to thatstamil.com

Thursday, May 7, 2009

ஒரு பெண்மணிக்காக ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொல்வதா? - பாரதிராஜா

சென்னை: சோனியா காந்தி என்ற ஒரு பெண்மணிக்காக ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தமிழர்களின் முதல் எதிரி என்று ஆவேசமாக கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

இதுகுறித்து ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி..

நாங்கள் கடந்த ஆறு மாத காலமாக இலங்கையில் தமிழ் மக்கள் படும் துயரத்தை கண்டித்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மத்திய அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து இலங்கையில் தமிழர்கள் குண்டடிபட்டும், பட்டினியிலும் செத்துக் கொண்டிருக்கின்றனர்.

சிவசங்கர் மேனன் 2 முறை கொழும்பு போனார். பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ராஜபக்சேவிடம் போனில் பேசி தமிழ் மக்களை பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால் இதெல்லாம் வெட்டி வேலை. யாராவது இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போனாலோ அல்லது போனில் பேசினாலோ, உடனே இலங்கை அதிபர் ஒரு அறிக்கை விடுவார் - தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா எங்களுக்கு துணை நிற்கிறது என்பார் அவர். ஆனால் தொடர்ந்து அப்பாவிகளை, நிராயுதபாணிகளை அவர்கள் கொன்றுதான் வருகின்றனர்.

இன்றைய இந்த நிலைக்கு முழுக் காரணம் காங்கிரஸ் கட்சிதான். அதுதான் பொறுப்பு. அவர்களால் தடுத்து நிறுத்த முடியும், ஆனால் செய்ய மாட்டேன் என்கிறார்கள்.

காங்கிரஸ் கூட்டணி அரசுதான் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குகிறது, இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது, இலங்கை அரசு போரில் வெல்ல பணத்தையும் அள்ளித் தருகிறது.

சோனியா காந்திக்காக அவர்கள் பழி வாங்குகிறார்கள். ஒரு பெண்மணிக்காக ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரஸுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூறுவதை காங்கிரஸ் எதிர்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. அவர்கள் ஜனநாயக ரீதியில் எங்களுடன் மோதட்டும். எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்க அவர்களுக்கு உரிமை இருக்கிறதென்றால், அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கேட்க எங்களுக்கும் உரிமை உள்ளது. நாங்கள் வாக்கே அளிக்காதீர்கள் என்று மக்களிடம் கூறவில்லையே..

நாங்கள் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. காங்கிரஸுக்கு எதிராக மட்டுமே நாங்கள் பிரசாரம் செய்கிறோம். வேறு எந்தக் கட்சிக்கு எதிராகவும் நாங்கள் பிரசாரம் செய்யவில்லை. காங்கிரஸைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் மக்கள் வாக்களிக்கட்டும்.

ஜனநாயகத்தில் கருப்புக் கொடி காட்டுவதில் தவறே இல்லை. அது நமது எதிர்ப்பைக் காட்ட ஒரு அடையாளம். முடிந்தால் நாங்கள் கருப்புக் கொடி காட்டுவதை அவர்கள் தடுத்து நிறுத்திக் கொள்ளட்டும்.

மே 11ம் தேதி மாலை 5 மணி வரை காங்கிரஸ் எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ அங்கெல்லாம் போய் தீவரமாக பிரசாரம் செய்வோம். காங்கிரஸ் கட்சி தமிழர்களின் எதிரி, அக்கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என மக்களிடம் கேட்டுக் கொள்வோம். அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்றார் பாரதிராஜா

Thanks to www.thatstamil.com

Wednesday, May 6, 2009

தமிழ்நாட்டு மக்கள் மே 13 இல் ஒரு தெளிவான செய்தியை தெரிவிப்பார்கள்: நடேசன் வலுவான நம்பிக்கை

தமிழ்நாட்டு மக்கள் எதிர்வரும் புதன்கிழமை (13.05.09) நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தெளிவான செய்தியை தெரிவிப்பார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வலுவான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘த வீக்’ ஆங்கில இதழின் ஊடகவியலாளர் கவிதா முரளிதரனுக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலின் தமிழ் வடிவம் வருமாறு:

தற்போதைய நிலமை தொடர்பாக நீங்கள் தெரிவிக்கும் கருத்து என்ன?

உலகின் சில பெரிய சக்திகளின் துணையுடன் இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்த முயல்வது, இந்தத் தீவில் அமைதியையும், உறுதித்தன்மையையும் ஏற்படுத்தாது. எமது மக்களின் உரிமைகள் பெறப்படும் வரை எமது போராட்டம் தொடரும்.

இப்போது - தமிழ் மக்கள் சிறிலங்கா அரசின் விரைவுபடுத்தப்பட்ட இன அழிப்பு போருக்கு இலக்காக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா அரசு தமிழ் மக்களை அவர்களின் தாயகத்தில் இருந்து தொடர்ந்து வெளியேற்றி வருவதன் தொடர்ச்சியே இது.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு சுகவீனம், விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுவிட்டனர் என வெளியாகும் தகவல்கள் உண்மையா?

இன்றைய போரானது பல மட்டங்களில் நடைபெற்று வருகின்றது. தமிழீழ மக்களின் மனிதாபிமான அவலங்களுக்கு இந்திய மக்களிடத்தில் இருக்கும் ஆதரவை மழுங்கடிக்கும் செயல்களில் சில ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. களமுனை தகவல்களை பொறுத்தவரையில் கூட, இராணுவத்தால் பரப்பப்படும் வதந்திகளுக்கு சில ஊடகங்கள் நம்பகத்தன்மையை ஊட்ட முனைகின்றன.

இலங்கையின் தற்போதைய நிலமையில் இந்திய தேர்தலின் தாக்கம் எவ்வாறு இருக்கும்?

வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் - ஈழத் தமிழ் மக்கள் இந்திய மக்களின் மிக நெருங்கிய நண்பர்களே. யார் ஆட்சி அமைத்தாலும் இது உறவு எப்போதுமே இப்படித்தான் இருக்கும். ஆனால் தற்போது வன்னியில் எற்பட்டுள்ள மனிதப் பேரவலத்தை இன்றைய இந்திய மத்திய அரசு புறக்கணித்து வருவது வேதனையானது.

இதற்கிடையில் - இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் வலுவான இராணுவ ஒத்துழைப்பு உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. தமிழ் மக்களின் அரசியல் அவாக்களை நிறைவுசெய்யும் ஒரு மாற்றத்தை இந்த தேர்தல் கொண்டுவரும் என நாம் நம்புகின்றோம்.

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற கருணாநிதியின் வாதத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டு மக்கள் தான் தமிழீழ மக்களின் நம்பிக்கையும், பலமும். தமிழக மக்கள் இதனை நன்கே அறிவார்கள். காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு இராணுவ ஒத்துழைப்புக்களை வழங்கி அதன் தமிழின அழிப்பு போருக்கு உதவி வருவதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

எதிர்வரும் மே 13 ஆம் நாள் நடைபெறப்போகும் தேர்தலில் ஈழத்தமிழ் மக்களோடு தாம் சேர்ந்திருக்கும் செய்தியை தமிழக மக்கள் தெளிவாகத் தெரிவிப்பார்கள் என்பது எனது வலுவான நம்பிக்கை.

தனி ஈழம் தான் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என செல்வி ஜெ. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். உங்களின் பார்வை என்ன?

இதனைத்தான் ஈழத் தமிழ் மக்களும் உலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களும் கேட்பதற்கு வேண்டி நின்றார்கள். தற்போது ஜெயலலிதா அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் சிறிலங்கா அரசிற்கும், அனைத்துலக சமூகத்திற்கும் தெளிவான செய்தியை வழங்கியிருக்கும். அதாவது, ஈழத் தமிழ் மக்கள் தனித்து விடப்படவில்லை என்பதே அந்த தகவல்.

ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து உங்களின் கருத்து என்ன?

ஈழத் தமிழ் மக்கள் சந்தித்துவரும் அழிவுகள் கடந்த சில மாதங்களாக மோசமடைந்து வருகின்றன. தி.மு.க.வும், கலைஞர் கருணாநிதியும் தமிழ் மக்களின் மீது அக்கறை உள்ளவர்கள் தான். ஆனால், அறிக்கைகளும், பேச்சுக்களும், தேர்தல் வாக்குறுதிகளும் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்துவிடவில்லை. இதுவரை காலத்தில் - தன்னால் ஆக்கபூர்வமான காரியங்களைச் செய்திருக்க முடியும் என்பது கலைஞருக்கு நன்றாகவே தெரியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

போர் நிறுத்தம் வேண்டி கருணாநிதி மேற்கொண்ட உண்ணாநிலைப் போராட்டம் தொடர்பான உங்களின் பார்வை என்ன?

ஏப்ரல் 27 ஆம் நாள் இரவில் இருந்து மறுநாள் காலை வரை சிறிலங்கா இராணுவம் 5,000-க்கும் அதிகமான பீரங்கிக் குண்டுகளை மக்கள் வாழும் ‘பாதுகாப்பு வலய’ பகுதி மீது வீசித் தாக்கியது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் இதில் கொல்லப்பட்டுள்ளதுடன், 1,500-க்கும் அதிகமானோர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

ஆகவே, இது தொடர்பில் நான் வேறு எதுவும் கூறுவதற்கு இல்லை.

தமிழ் மக்களை சிறிலங்கா இன அழிப்புக்கு உட்பட்டுத்துவதாக பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ் பொப் பாடகி எம்.ஐ.ஏ. வெளிப்படையாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?

அவர் எமது மண்ணின் குழந்தை, உலகு எங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழ் மக்களில் மிகவும் திறமையுள்ள இளம் உறுப்பினர்களில் ஒருவர். அவர் தொடர்பாக நாம் பெருமையடைகின்றோம். அவரின் ஆதரவு ஈழத் தமிழ் மக்களுக்கு பலம் சேர்க்கும் வலுவான காரணிகளில் ஒன்று.

சிறிலங்கா அரசின் வலிமை மிக்க எல்லா பிரச்சார சாதனங்களும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை அழிப்பதிலேயே முனைப்பாக செயற்படுகின்றன. இருந்த போதும் மனிதநேயம் கொண்ட அவரின் இதயம் தான் தமிழ் மக்கள் படும் துன்பம் தொடர்பாக அவரை பயமின்றி பேசவைத்துள்ளது என்றார் பா.நடேசன்.

Thanks to Nerudal.com

http://www.nerudal.com/nerudal.4856.html

தமிழகத்தில் நடப்பது 'தாதாகிரி' அரசு-ராமதாஸ்

வேலூர்: அமைதியாக தேர்தல் நடந்தால் அதை காந்திகிரி என்பார்கள். ஆனால், தற்போது தமிழகத்தில் பத்திரிகைகளை மிரட்டுகிறார்கள். தமிழகத்தில் தாதாகிரி அரசு நடக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வேலூரில் பிரசாரம் செய்த ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில்,

டெல்லியை சேர்ந்த டிஎம்எஸ் என்ற நிறுவனம் கடந்தாண்டு ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் எந்த மாநிலத்தில் வாக்களிக்க பணம் அதிகம் கொடுக்கப்படுகிறது என கேட்டது. அதற்கு மக்கள் கர்நாடகத்துக்கு முதலிடமும், தமிழகத்துக்கு இரண்டாவது இடமும் கொடுத்தனர்.

ஆனால், தற்போது ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் தமிழகம் முதலிடத்துக்கு வந்துள்ளது என்பதை என்னால் சொல்ல முடியும். சாராயம், மணல் கொள்ளை, லாட்டரி, கல்விக் கொள்ளை போன்றவற்றின் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு கன்னியாகுமரி முதல் கும்மிடிப்பூண்டி வரையிலும், நாகப்பட்டிணத்தில் இருந்து கோவை வரையிலும் தேர்தலில் கொட்டுகிறார்கள்.

இந்த தேர்தலில் ஜனநாயகம், பணநாயகமாக மாறிவிட்டது. கருணாநிதி எப்போதும் பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசுவார். தானும் ஒரு பத்திரிகைகாரன் என சொல்லி கொள்வார்.

ஆனால், உண்மை செய்தியை வெளியிட்டதற்காக ஒரு பத்திரிகையை மறைமுகமாக முரசொலியில் கருணாநிதி மிரட்டி எழுதியுள்ளார். அதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஒரு இடத்தில் தேர்தல் அமைதியாக நடந்தால் அதை காந்திகிரி என்று சொல்வார்கள். ஆனால், தமிழகத்தில் அதற்கு மாறாக தாதாகிரி நடக்கிறது.

முதல்வர் கருணாநிதி இதுவரை மத்தியில் நான்கு அரசுகளுடன் கூட்டணி வைத்திருந்தார். முதலில் வி.பி.சிங்கின் தேசிய முன்னணி அரசில் இருந்தார், அடுத்து குஜ்ரால் மற்றும் தேவகவுடாவின் ஐக்கிய முன்னணி அரசில் இடம் பெற்றிருந்தார். மூன்றாவதாக வாஜ்பாயின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்திருந்தார், தற்போது நான்காவதாக மன்மோகனின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும் உள்ளார்.

இத்தனை கூட்டணியில் அவர் இருந்தாலும் தமிழ்நாட்டின் உரிமை பிரச்சினைகளான காவிரி நதிநீர் பிரச்சினை, முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகளை இதுவரையிலும் தீர்த்து வைக்கவில்லை என்றார் ராமதாஸ்.

முன்னதாக அரக்கோணத்தில் பாமக வேட்பாளர் ஆர்.வேலுவை ஆதரித்து ராமதாஸ் பேசுகையில்,

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி ஆகும். நான் இதுவரை 37 பாராளுமன்ற தொகுதிகளுக்கு பிரசாரம் செய்துவிட்டு வந்து விட்டேன். எல்லா இடங்களிலும் மிகப்பெரும் வரவேற்பும், பெண்கள் மத்தியில் எழுச்சியும் உள்ளது. இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம்.

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஜெ. தீர்வு காண்பார்...

இலங்கை பிரச்சினையில் ஜெயலலிதா நல்ல தீர்வு காண்பதற்காக கடுமையாக முயற்சித்து வருகிறார். தனி ஈழம் பெறுவது மட்டுமே ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு ஆகும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மத்தியில் நல்ல ஆட்சியை நாம் அமைக்க முடியும். அதன் மூலமாக ஈழப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

கிழக்கு வங்காளத்தில் பிரச்சினை ஏற்பட்ட போது இந்தியாவின் தலையீட்டால் வங்காளதேசம் அமைந்தது. அதேபோல் ஈழப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஜெயலலிதா முயற்சிப்பார். ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஜெயலலிதா தலையிலான இந்த கூட்டணி செவற்றி பெற வேண்டும்.

சாராயம் வேண்டாம்...

உலகத்திலேயே இளம் விதவைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். ஏனெனில் மிகவும் சிறிய வயதிலேயே சாராயத்தை குடித்து விட்டு குடல் வெந்து பலர் இறந்து விடுகிறார்கள். அதனால் தான் நாங்கள் சாராயம் வேண்டாம் என போராடி வருகிறோம்.

ஏழை-எளிய மக்கள், தொழிலாளிகள், விவசாயிகள், நடுத்தர மக்கள், அரசு ஊழியர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அதிக அளவில் பயன்பெறும் சிறப்பான திட்டங்கள் நம்மிடையே உள்ளது. அரக்கோணம் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் ஆர்.வேலு மிகச்சிறந்த அறிவாளி, நல்ல பண்பாளர். முழுநேரமும் மக்கள் சேவையை மட்டுமே செய்து வருகிறார் என்றார் ராமதாஸ்

Thanks to thatstamil.com

Tuesday, May 5, 2009

மக்கள் தொலைக் காட்சியில் மருத்துவர் அன்புமணி- கேள்வி பதில் நேரடி ஒளிபரப்பு:

மக்கள் தொலைக் காட்சியில் மருத்துவர்.அன்புமணி- கேள்வி பதில் நேரடி ஒளிபரப்பு:


இன்று (10-மே-09) இரவு, இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு, மருத்துவர் அன்புமணியின்
- "உங்கள் கேள்விக்கு பதில் என்ன?" கேள்வி பதில் நேரடி ஒளிபரப்பு: உலக தமிழர்கள் , அரசியல், கலை, பண்பாடு,சுற்றுசூழல், மற்றும், உலக தமிழர்களின் பிரச்சனைகளை பற்றிய கேள்விகளை நேரடியாக மருத்துவர் அன்புமணிகேளுங்கள்.


உலக தமிழர்களே , மக்கள் தொலைக் காட்சியில் இந்த நேரடி நிகழ்ச்சியை தவறாமல் பாருங்கள்

Monday, May 4, 2009

ஜெயா தொலைக் காட்சியில் மருத்துவர் ராமதாசு- கேள்வி பதில் நேரடி ஒளிபரப்பு:

ஜெயா தொலைக் காட்சியில் மருத்துவர் ராமதாசு- கேள்வி பதில் நேர்காணல் ஒளிபரப்பு:


இன்று (04-மே-09) இரவு, இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு, மருத்துவர் ராமதாசின் -நேர்காணல் ஒளிபரப்பு.உரையாடுபவர் ரபிபெர்னாட்

உலக தமிழர்களே , ஜெயா தொலைக் காட்சியில் இந்த நேரடி நிகழ்ச்சியை தவறாமல் பாருங்கள்

நேருக்கு நேர் விவாதம்-கருணாநிதிக்கு ராமதாஸ் சவால்

சென்னை: இலங்கைப் பிரச்சனையில் முதல்வர் கருணாநிதி நடத்திய கிளைமாக்ஸ் நாடகம்தான் உண்ணாவிரதம். இந்த பிரச்சனையில் அவருடன் நேருக்கு நேர் பொது மேடையில் விவாதிக்க நான் தயார் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
திமுகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எவ்வளவு நாடகம் ஆடினாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை என்று தெரிந்துவிட்டது. இதனால் தேர்தல் விதிமுறைகளை மீறி சட்டத்தையும், ஜனநாயக நெறிமுறைகளையும் திமுகவினரும் அதன் கூட்டணி தலைவர்களும் காற்றில் பறக்கவிட்டுவிட்டனர்.

500 ரூபாய் நோட்டு கட்டுக்களுடன் திமுக வேட்பாளர்களும், அவர்களது அடியாட்களும் சுதந்திரமாக நடமாடி வருகிறார்கள். மணல், கள்ளச்சாராயம் மற்றும் லாட்டரி மூலம் கிடைத்த அனைத்து கறுப்புப் பணமும் வெள்ளமாய் பாய்கிறது.

இதைத் தடுக்க வேண்டிய தேர்தல் அதிகாரிகளான மாவட்ட கலெக்டர்களும், போலீசாரும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள். குறிப்பாக வேலூர் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர்களும், போலீஸ் அதிகாரிகளும் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் போல் செயல்படுகிறார்கள்.

அரக்கோணம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த திமுகவினர் மீது புகார் கொடுத்த பாமக மற்றும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறார்கள். அரக்கோணத்தில் கல்விக் கொள்ளையில் கிடைத்த பணத்தை வைத்து சாராய ஆலை தொடங்கியுள்ள ஒரு பிரமுகர் ஊரையே விலைபேசி கொண்டிருக்கிறார்.

பஸ் கட்டண உயர்வு மற்றும் ரத்து என்பது தமிழக வரலாற்றில் இல்லாத மோசடியாகும். இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் நேருவும், முதல்வர் கருணாநிதியும் பதவி விலக வேண்டும்.

மாவட்ட கலெக்டர்களை டம்மியாக்கிவிட்டு தேர்தல் அதிகாரிகளுக்கும், மேலிட பார்வையாளர்களுக்கும் பொறுப்புகளையும், அதிகாரங்களையும் வழங்க வேண்டும்.

வேலூர் கலெக்டர் பாமக மற்றும் அதிமுக நிர்வாகிகளை மிரட்டுகிறார். அந்த கலெக்டரை மாற்ற வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு புகார் செய்துள்ளோம். நாளை சென்னை வரும் தலைமை தேர்தல் ஆணையரிடம் இது பற்றி புகார் செய்வோம்.

பஸ் கட்டணத்தை குறைத்து தினமும் ரூ.6 கோடி சலுகை வழங்கினார்கள்.
தேர்தல் ஆணைய உத்தரவால் பஸ் கட்டண குறைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

காங்கிரசும், முதல்வர் கருணாநிதியும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக மக்களை ஏமாற்றுகிறார்கள். அங்கு போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இன்றும் ஒரு மருத்துமனையில் நடத்திய குண்டு வீச்சில் 162 பேர் இறந்துள்ளனர்.

தனி ஈழம்தான் தீர்வு என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா துணிச்சலுடன் அறிவித்துள்ளார். இதனை உலகத் தமிழர்கள் பலர் வரவேற்றுள்ளனர். ஆனால் கருணாநிதி இந்தியா போர் படை அனுப்ப முடியுமா? சீனா சும்மா இருக்குமா? என்று பேசி வருகிறார்.

1971ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் இருந்த வங்க மொழிபேசும் மக்களுக்கு தனி நாடு உருவாக்க இந்திரா காந்தி எடுத்த முயற்சி கூட சீனா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் எதிர்த்தன. ஆனால் துணிச்சலுடன் இந்திராகாந்தி தனி நாடு உருவாக்கினார். இதை வரவேற்று கருணாநிதி தாம் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எப்போதுமே தமிழ், தமிழர், தமிழினம் என்று வாய்கிழிய பேசுவார். ஆனால் காரியம் என்று வந்துவிட்டால் தன் நலம், தன் கட்சி, தனது ஆட்சி என்றுதான் செயல்படுவார்.

இலங்கைப் பிரச்சனையில் அவர் நடத்திய கிளைமாக்ஸ் நாடகம்தான் உண்ணாவிரதம். இந்த பிரச்சனையில் நேருக்கு நேர் பொது மேடையில் அவருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

கருணாநிதியும், அவரது மகன் ஸ்டாலினும் பாமக மீது தாக்குதலை தொடங்கியிருக்கிறார்கள். ஸ்டாலின் அரசியல் கத்துக்குட்டி. அவர் பாமகவின் பயிலரங்கத்திற்கு வந்து அரசியல் பயிற்சி எடுக்கட்டும்.

தாத்தா, பேரன் சண்டையில் அரசு கேபிள் டிவி தொடங்கினார்கள். இப்போது அதை கைவிட்டு விட்டார்கள். நாங்கள் கொடுத்திருந்த திட்டத்தின்படி கேபிள் டிவியை அரசு தொடங்கியிருந்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலையும், ரூ.1000 கோடி வருமானமும் கிடைத்திருக்கும்.

கள் இறக்குவதைவிட அதனை பதநீராக பதப்படுத்தி அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் விற்றால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பூரண மதுவிலக்கு என்பதே பாமகவின் கொள்கையாகும் என்றார் ராமதாஸ்.

-Thanks to thatstamil.com

இந்தியா போர் நிறுத்தமே கோரவில்லை-கோதபய

அட பாவிகளா...இன துரோகிகளா? பொய் பித்தலாட்ட காரர்களா....இது உண்மை என்றால், நீங்கள் எதையும் செய்ய துணிந்தவர்கள்...கடவுள் தான் தண்டிப்பார்..

---------------------
கொழும்பு: இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தவில்லை என்று அந் நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளரும் அதிபர் ராஜபக்சவின் சகோதரருமான கோதபய மீண்டும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகிய இருவரும் கடந்த மாதம் இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டனர். அதிபருடன் அவர்கள் பேச்சு நடத்தினர். அவருடன் நடத்திய பேச்சு குறித்து விவரம் எதுவும் அப்போது தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு கோதபய பேட்டி அளித்துள்ளார்.

அதில், கூட்டணிக் கட்சியான திமுகவின் நிர்பந்தம் காரணமாகவே இந்திய அரசு இலங்கைக்கு நெருக்குதல் அளித்து வருவதாக செய்திகள் வெளியாவது குறித்த கேளிவிக்கு பதிலளித்த அவர்,

சண்டை நிறுத்தம் தொடர்பாகவோ அல்லது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதலை நிறுத்துவது குறித்தோ இந்திய அதிகாரிகள் எங்களை வற்புறுத்தவில்லை. அரசின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது தொடர்பாகவே அவர்கள் பேச்சு நடத்தினர்

விடுதலைப் புலிகள் மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பாக இலங்கைக்கு இந்திய அதிகாரிகள் எவ்வித நெருக்குதலும் தரவில்லை. விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள அப்பாவி மக்களை பத்திரமாக மீட்பது தொடர்பாகவே அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

போர் பகுதியிலிருந்து, அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தஞ்சம் புகுந்த தமிழர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து இந்திய அதிகாரிகள் இருவரும் அப்போது தி/ருப்தி தெரிவித்தனர். மேலும் இந்தியா சார்பில் நிவாரண உதவியாக ரூ.200 கோடி அளிக்கப்படும் என்று உறுதியளித்தனர் என்றார்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய மேற்கத்திய நாடுகளும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்குகளை கருத்தில் கொண்டே போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கைக்கு நெருக்குதல் அளிக்கின்றன. புலம்பெயர்ந்த மக்கள் அளிக்கும் நிதியை அந்நாட்டு அரசியல் கட்சிகள் பெற்றுக் கொள்கின்றன. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோள் என்றார் கோதபய.

இதன்மூலம் நாராயணன், மேனன் ஆகியோரை வைத்துக் கொண்டு மத்திய அரசு போர் நிறுத்த விஷயத்தில் தமிழகத்தை ஏமாற்றி வருவது மீண்டும் தெள்ளத் தெளிவாகிறது.

- thanks to thatstamil.com

Saturday, May 2, 2009

மக்கள் தொலைக் காட்சியில் மருத்துவர் ராமதாசு- கேள்வி பதில் நேரடி ஒளிபரப்பு:

மக்கள் தொலைக் காட்சியில் மருத்துவர் ராமதாசு- கேள்வி பதில் நேரடி ஒளிபரப்பு:


இன்று (03-மே-09) இரவு, இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு, மருத்துவர் ராமதாசின் - "உங்கள் கேள்விக்கு பதில் என்ன?" கேள்வி பதில் நேரடி ஒளிபரப்பு: உலக தமிழர்கள் , அரசியல், கலை, பண்பாடு மற்றும், உலக தமிழர்களின் பிரச்சனைகளை பற்றிய கேள்விகளை நேரடியாக மருத்துவர் ராமதாசிடம் கேளுங்கள்.


உலக தமிழர்களே , மக்கள் தொலைக் காட்சியில் இந்த நேரடி நிகழ்ச்சியை தவறாமல் பாருங்கள்

ஈழம்: ப.சிதம்பரம் தான் முதல் குற்றவாளி - ராமதாஸ்

தஞ்சை: இலங்கையில் தமிழர்கள் பலியாக முதல் காரணமாக இருப்பது சிதம்பரம் தான். அவர் தான் முதல் குற்றவாளி என என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


தஞ்சை தொகுதி மதிமுக வேட்பாளர் துரை பாலகிருஷ்ணனை ஆதரித்து திருவையாறில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்தார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,


இலங்கையில் தமிழர்கள் சாக காரணமாக இருந்தது உள்துறை அமைச்சர் சிதம்பரம் தான். அவர் தான் முழு முதல் குற்றவாளி. விடுதலைப்புலிகளுக்கு அழிவே கிடையாது. அவர்களை அழிக்கவும் முடியாது. அவர்கள் புற்றீசல் போல தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார்கள்.


இலங்கைக்கு இந்திய படைகளை எப்படி அனுப்ப முடியும் என்று குலாம்நபி ஆசாத் கேள்வி கேட்கிறார். இலங்கையில் தனி ஈழம் அமைக்க வேண்டும் என்பது தேசவிரோத செயல் என காங்கிரஸ்காரர்கள் கூறகின்றனர்.
தனி ஈழம் அமைந்தால் மகிழ்ச்சி என்று கூறிய கருணாநிதி இதற்கு என்ன பதில் கூறப்போகிறார். தனி ஈழம் அமைவது அவசியமா? இல்லையா? இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.


ஆனால், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டு பொங்கி எழுந்த ஜெயலலிதா தனி தமிழீழம் அமைவது தான் ஒரே வழி என்று கூறியுள்ளார். இன்னும் ஒரு படி மேலேச்சென்று அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று புதிய மத்திய அரசு அமையும் போது இலங்கைக்கு இந்திய படைகளை அனுப்பி தனி ஈழம் பெற்று தருவேன் என்று கூறியுள்ளார் என்றார் ராமதாஸ்.

நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: