Thursday, March 20, 2014

காதலுக்கு பாமக எதிரானது இல்லை: டாக்டர் ராமதாஸ் பேச்சு


சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அகோரத்தை ஆதரித்

து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரை செழியன் தலைமை தாங்கினார்.
மாநில துணை பொதுச்செயலாளர் ஆலயமணி மாவட்ட நிர்வாகிகள் அய்யப்பன், கல்யாணசுந்தரம், ஸ்டாலின், மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாலர் பிரேம் சங்கர் வரவேற்று பேசினார். தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் பா.ஜ.க. கூட்டணி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளரும், மாநில துணை பொது செயலாளருமான க.அகோரத்தை அறிமுகம் செய்து வைத்து பேசியபோது,

’’தமிழகத்தை 47 ஆண்டுகாலம் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறிமாறி ஆட்சிசெய்து தமிழக மக்களை குடிகார மக்களாக மாற்றியதுதான் இவர்களின் சாதனை. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் கடந்த காலங்களில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக வளம் கொழிக்கும் பூமியாகவும் இருந்தது.
ஆனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சியால் முற்போகம் விளைந்த வயல்கள் காலப்போக்கில் இரண்டு போகமாகவும் தற்போது ஒரு போகமாகவும் மாறிவிட்டது. வருங்காலங்களில் எலிக்கறி சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட உள்ளது.
தமிழகத்தில் கடந்த கால தி.மு.க. ஆட்சிகாலத்தில் 6 மணிநேரம் மின்வெட்டு நிலவியது. தற்போது அதிமுக ஆட்சியில் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் 18 மணிநேரம் மின்வெட்டு நிலவி வருகிறது. காலப்போக்கில் தமிழகம் இருண்ட பூமியாக மாறும் நிலை உள்ளது.
வாக்காளர்கள் ஓட்டுக்காக பணம் வாங்கக்கூடாது. அது உங்கள் எதிர்காலத்தை பாழாக்கிவிடும். தமிழகத் தில் வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். இதை சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் பா.ம.க.தான் பாடுபட்டு வருகிறது. இதை யாரும் மறுக்கமுடியாது.
தமிழகத்தில் காதலுக்கு பா.ம.க. எதிராக இல்லை. ஆனால் காதல் நாடகத்தை தான் எதிர்க்கின்றோம். ஒரு சில கட்சியினர் வேண்டுமென்றே ஜாதி கலவரத்தை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் 134 பா.ம.க. வினரை குண்டர் சட்டத்திலும் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்தனர்.
இது தொடர்பாக தமிழக அரசு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் அகோரத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேணடும். அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்’’ என்றூ பேசினார்.

தமிழக மீனவர்களைக் காப்பதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி: ராமதாஸ் கண்டனம்

 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 50 பேரை நேற்று மாலை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நிகழ்ந்த  சில மணி நேரத்தில் இராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் கைது தொடர்பான இரு நிகழ்வுகளுமே இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தான் நடைபெற்றுள்ளன. இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை சட்டவிரோதமாக சிறை பிடித்துச் சென்றதுடன் அவர்களுக்கு சொந்தமான 18 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர் சங்கங்களுக்கு இடையிலான பேச்சுக்களை இருநாட்டு அரசுகளும் ஏற்பாடு செய்துள்ளன. கடந்த ஜனவரி மாத இறுதியில் முதல் கட்ட பேச்சுக்கள் நடத்தப்பட்ட நிலையில்,  அடுத்த சில நாட்களிலேயே 172 தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரினரால் கைது செய்யப்பட்டனர்.
2ஆம் கட்ட பேச்சுக்கள் கடந்த 13 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், அதற்கும் முன்பாக தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை  ஏற்க மறுத்துவிட்டது. மீனவர்களை விடுவிக்காத நிலையில் அந்நாட்டு மீனவர்களுடன் பேச்சு நடத்த முடியாது என தமிழக அரசு எச்சரித்தது. இதற்கு பயந்து 172 மீனவர்களை கடந்த வாரம் விடுதலை செய்த இலங்கை அரசு, அடுத்த சில நாட்களிலேயே வேறு 75 மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
முதல்கட்ட பேச்சுக்கள் முடிவடைந்ததற்கு அடுத்த நாளே ஏராளமான மீனவர்களை கைது செய்வதும்,  இரண்டாம் கட்ட பேச்சுக்களுக்கு முன்பாக இந்தியாவின் எச்சரிக்கைக்கு பணிந்து மீனவர்களை ஒருபுறம் விடுதலை செய்வதை போல செய்துவிட்டு, இன்னொரு புறம் கொத்துக்கொத்தாக மீனவர்களை கைது செய்வதும் எதேச்சையாக நடப்பதைப் போல தெரியவில்லை. மாறாக, இந்தியாவை  சீண்டிப் பார்க்கும் நடவடிக்கையாக இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய செயல்பாடுகள் தோன்றுகின்றன.
கடந்த ஓராண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. ஆனால், இதற்காக இலங்கை மீது நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, இந்த அத்துமீறலை கண்டிக்கக் கூட இந்திய அரசு முன்வரவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களை என்ன செய்தாலும் இந்திய அரசு கேட்காது என்ற துணிச்சலில் தான் இலங்கை கடற்படை இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகிறது.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசும் எந்தவிதமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் பிரதமருக்கு கடிதம் எழுதுவதுடன் தமது கடமை முடிந்துவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா நினைத்துக் கொள்கிறார்.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு பாதுகாப்பாக தமிழக காவல்துறையின் கடலோர பாதுகாப்புப் பிரிவு காவலர்களை அனுப்பலாம் என பலமுறை நான் ஆலோசனை கூறியும், அதை செயல்படுத்த தமிழக அரசுக்கு துணிச்சல் வரவில்லை. தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்ததற்காக சிங்களக் கடற்படையினர் மீது இராமேஸ்வரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதன்மீது நடவடிக்கை எடுத்திருந்தாலாவது இலங்கை அரசு பயந்திருக்கும். ஆனால், தமிழக அரசு அதையும் செய்ய முன்வராததால் தான் தமிழக மீனவர்களை சிங்களப்படை தொடர்ந்து சிறைப்பிடித்து வருகிறது.
எனவே, இனியாவது மத்திய, மாநில அரசுகள் விழித்துக் கொண்டு தமிழக மீனவர்களை பாதுகாக்க முன்வர வேண்டும். இலங்கை அரசிடம் பேசி, இப்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி அறிவுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, மீனவர்கள் கைது செய்யப்படுவது இனியும் தொடர்ந்தால், சிங்களப்படையினரை கைது செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்

Sunday, March 16, 2014

வாகன சோதனையால் வணிகர்கள் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது : ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பண பலம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், வாக்குக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கவும் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் நோக்கமும், அதற்காக அதன் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளும் பாராட்டத் தக்கவை ஆகும்.

தேர்தலில் பயன்படுத்துவதற்காக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பணம் கொண்டு செல்லப்படு வதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை சுமார் ரூ. 7 கோடி ரொக்கப்பணமும், ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நகைகள், சேலைகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையம் நல்ல நோக்கத்துடன் தான் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது என்ற போதிலும், இந்த நடவடிக்கைகளால் அப்பாவி பொதுமக்களும், வணிகர்களும் தான் கடுமையாக பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். மருத்துவச் செலவு, வீட்டு விசேஷங்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக பொதுமக்கள் கொண்டு செல்லும் பணமும், வணிகத்திற்கான பொருட்களை கொள்முதல் செய்ய வணிகர்கள் கொண்டு செல்லும் பணமும் தான் பெரு மளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


கடந்த சில நாட்களுக்கு முன் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் குழந்தைக்கு கோயிலில் வைத்து காது குத்துவதற்காக சென்ற போது, அவர்களின் வாகனத்தை மறித்து சோதனை செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ரூ. 35 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். காதணி விழா செலவுக்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக அவர்கள் கூறியதை அதிகாரிகள் ஏற்கவில்லை.

இதனால் அக்குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் இதேபோல் ஏராளமான மக்களும், வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை மட்டும் தான் பறிமுதல் செய்ய வேண்டுமென ஆணையம் உத்தரவிட்டுள்ள போதிலும் அதிகாரிகள் பணம் பறிக்கும் நோக்குடன் தேவையற்ற கெடுபிடி காட்டு கின்றனர்.
ரூ. 50 ஆயிரத்திற்கும் கூடுதலான பணத்தை கொன்டு செல்லும் மக்கள் அதற்கான ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைக்காக பணத்தை திரட்டிக்கொண்டும், கடன் வாங்கிக் கொண்டும் செல்லும்போது அதற்கான ஆவணங்களை பெறுவது சாத்தியமல்ல. உண்மையாகவே தவறான நோக்கத்திற்காக பணத்தை கொண்டு செல்பவர்கள் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆதாரங்களை தயாரிக்கும் நிலையில், நடைமுறைச் சிக்கல்களால் ஆவணங்களை பெற முடியாத அப்பாவிகள் தான் பாதிக்கப் படுகிறார்கள்.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும்கட்சியான அ.தி.மு.க.வும், ஆண்ட கட்சியான தி.மு.க.வும் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே ஒவ்வொரு தொகுதிக்கும் நூற்றுக்கணக்கான கோடிகளை கொண்டு சென்று பத்திரமாக பதுக்கி வைத்து விட்டனர். அவற்றை தங்களுக்கு சாதகமான அதிகாரிகளின் துணையுடன் வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளனர். இத்தகைய திட்டங்களை முறியடித்து, அவர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தை பறிமுதல் செய்வதன் மூலம் தான் தேர்தலில் பண பலம் பயன்படுத்தப்படுவதையும், ஓட்டுக்கு பணம் தரப்படுவதையும் தடுக்க முடியுமே தவிர, இத்தகைய நடவடிக்கைகளால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது.


எனவே, அப்பாவி மக்களையும், வணிகர்களையும் பாதிக்கும் வகையில் வாகன சோதனை என்ற பெயரில் கெடுபிடி காட்டுவதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சாத்தியமான, ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவதன் மூலம் வாக்குகள் விலைக்கு வாங்கப்படுவதை தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

Tuesday, March 11, 2014

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள்: கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு  அமைக்கப்பட்டிருந்த 10 குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் அகற்றியுள்ளனர். பல இடங்களில் எந்திரங்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவும் மாவட்டங்களில் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்த மாவட்டங்களில் வாழும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதை அறிந்த அப்பகுதி மக்களும், பா.ம.க. நிர்வாகிகளும் உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம் கொண்டு வந்து, அனுமதி பெற்று 10 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை அமைத்தனர். இதன்மூலம் இந்த இரு மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையான மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், அவற்றை தமிழக அரசு அதிகாரிகள் கடந்த இரு நாட்களுக்கு முன் அவசர, அவசரமாக அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால், இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள மக்கள் குடிப்பதற்கு தூய்மையான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த குடிநீர் எந்திரங்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அவற்றை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். உண்மையில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் அமைக்கப்பட்டதில் எந்தவிதமான விதிமீறல்களும் இல்லை.10 இடங்களிலுமே தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே குடிநீர் எந்திரங்கள் அமைக்கப்பட்டு விட்டன. தேர்தல் அட்டவணை மார்ச் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே  ஆரணியில் பிப்ரவரி 9 ஆம் தேதியும், கண்ணமங்கலத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதியும், போளூரில் 17 ஆம் தேதியும், செஞ்சியில் 20 ஆம் தேதியும், மேல்மலையனூர் மற்றும் ரெட்டணையில் பிப்ரவரி 25 ஆம் தேதியும், மயிலத்தில் 27 ஆம் தேதியும், செய்யாறில் பிப்ரவரி 28 ஆம் தேதியும் தெள்ளாறில் மார்ச் ஒன்றாம் தேதியும்,  வெள்ளிமேடு பேட்டையில் மார்ச் 2 ஆம் தேதியும் குடிநீர் எந்திரங்கள் திறக்கப்பட்டன. குடிநீர் எந்திரங்கள் திறக்கப்பட்டது குறித்து ஊடகங்களில் வெளிவந்த செய்திகளே இதற்கு சாட்சியாகும்.
அதுமட்டுமின்றி, மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தான் இவை அமைக்கப்பட்டனவே தவிர, வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல. பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும்,  அவர்களின் விருப்பம் மற்றும் உணர்வுகளை மதிக்கும் வகையிலும் இது போன்ற பல்வேறு உதவிகளை அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கின்றன.
பள்ளிகள் இல்லாத ஊர்களில் பள்ளிகளை அமைத்து நடத்துவது, அரசுப் போட்டித்தேர்வுகள் முதல்  இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகள் வரை அனைத்துத் தேர்வுகளுக்குமான தனிப் பயிற்சி வகுப்புகளை நடத்துவது, மருத்துவம் மற்றும் கல்வித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வசதியில்லாத மக்களுக்கு அறக்கட்டளைகள் மூலம் மாதம் தோறும் நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட உதவிகளை அரசியல் கட்சியினரும், தனி மனிதர்களும் செய்து  வருகின்றனர். இத்தகைய உதவிகளை செய்பவர்களில் பலர் தேர்தல்களில் போட்டியிட்டு பல்வேறு உயர் பதவிகளையும் அடைந்துள்ளனர். இன்னும் சில கட்சித் தலைவர்கள் மக்களால் வணங்கப்படும் தலைவர்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து தங்கக் கவசம் சாத்துவது உள்ளிட்ட சடங்குகளையும் மேற்கொள்கின்றனர். இவற்றுக்கெல்லாம் நோக்கம் மக்களின் உணர்வுகளையும், தேவைகளையும் நிறைவேற்றுவது தானே தவிர, அரசியல் இலாபம் தேடுவது அல்ல.
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்வது தொடரும் நிலையில், அடிப்படைத் தேவையான  குடிநீர் வழங்க அமைக்கப்பட்ட எந்திரங்களை ஆளுங்கட்சி  தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் அகற்றியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். தேர்தல் அறிவிப்பு வெளியானதும் குடிநீர் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் வரையப்பட்டிருந்த தலைவர்களின் படங்கள் மறைக்கப்பட்டுவிட்டன. குடிநீர் எந்திரங்களுக்கு  தேர்தல் ஆணையமும்  எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஆனால், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை அதிகாரிகள் மூலம் ஆளுங்கட்சியினர் அகற்ற வைத்திருப்பதைப் பார்க்கும் போது, மக்கள் அவதிப்பட்டாலும் பரவாயில்லை; மற்றவர்களுக்கு பெயர் கிடைத்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் செயல்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டால், தேர்தல்கள் நியாயமாக நடைபெற வாய்ப்பில்லாமல் போய்விடும். எனவே, தேர்தல் விதிகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி, மக்களுக்கு  பாதிப்பு ஏற்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது. அகற்றப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை மீண்டும் அதே இடங்களில் அமைக்க ஆணையிடுவதுடன், இதற்கு காரணமான அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Sunday, March 9, 2014

ரங்கசாமி–அன்புமணி ராமதாஸ் சந்திப்பு



பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சு வார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. புதுவை பாராளுமன்ற தேர்தலை பொருத்தவரையில் பா.ம.க. போட்டியிடும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அதன்படி புதுவை தொகுதி வேட்பாளராக பா.ம.க. மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அனந்தராமன் அறிவிக்கப்பட்டார். தற்போது அவர் வாக்குசேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுவை முதலமைச்சர் ரங்கசாமியை, முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் சந்தித்து பா.ம.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதாவுடன் கூட்டணியில் சேரும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுவை 100 சாலையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று இரவு 10.30 மணிக்கு முன்னாள் மத்திய மந்திரியும், தமிழக இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாசும், முதலமைச்சர் ரங்கசாமியும் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்தது. பின்னர் அவர்கள் இருவரும் ஒன்றாக அறையை விட்டு வெளியே வந்தனர். அதன்பிறகு அவர்கள் தனித்தனி காரில் சென்றுவிட்டனர்.
இந்த சந்திப்பின் போது அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அவர்கள் பேசி இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் அவர்களின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பின் போது புதுவை மாநில பா.ம.க. செயலாளர் அனந்தராமன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Thursday, March 6, 2014

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் கிராமத்துக்கு ஒரு டிராக்டர் இலவசம்: ராமதாஸ் அறிவிப்பு

புதுவை: பாமக ஆட்சிக்கு வந்தால் கிராமத்துக்கு ஒரு டிராக்டர் இலவசமாக வழங்கப்படும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உப்பு வேலூர் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாச் கலந்து கொண்டார்.
 

Wednesday, March 5, 2014

மீனவர்கள் சிறை பிடிப்பு: சிங்களப் படையினரை கைது செய்ய வேண்டும்: இராமதாசு அறிக்கை


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சிங்களப்படையினர் கைது செய்வது கடந்த சில நாட்களில் அதிகரித்திருக்கிறது. கடந்த திங்கட்கிழமை காரைக்கால் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 32 மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது  கைது செய்யப்பட்டனர். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே கச்சத்தீவு பகுதியில்  மீன் பிடித்த தொண்டி நாட்டுப்படகு மீனவர்கள் 15 பேரும், இராமேஸ்வரம்  விசைப்படகு மீனவர்கள் 10 பேரையும் அவர்களின் படகுகளுடன் சிங்களப்படையினர் நேற்று சிறைப் பிடித்துச் சென்றுள்ளனர்.
தமிழ்நாடு & இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 27 ஆம் தேதி நடந்த முதல்கட்ட பேச்சுக்களுக்கு முன்பாக தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் சிறை வைக்கப்பட்டிருந்த இருதரப்பு மீனவர்களும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், இப்பேச்சு முடிவடைந்த பின்னர் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் மீண்டும் கைது செய்யத் தொடங்கியுள்ளனர்.  அதிலும் குறிப்பாக இரு தரப்பு மீனவர்களிடையே இம்மாதம் 13 ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுக்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2 நாட்களில் மொத்தம் 3 சம்பவங்களில் தமிழக மீனவர்கள் 57 பேரை 13 படகுகளுடன் சிங்களப் படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
பிழைப்புக்காக மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சிங்களப்படையினர் கைது செய்து, 3  மாதங்கள் வரை சிறையில் அடைத்தும், படகுகளை பறிமுதல் செய்தும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை ஈடுபட்டிருக்கிறது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்குமிடையே  செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றன.  நேற்று முன்நாள் மியான்மரில் இராஜபக்சேவை சந்தித்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தமிழ்நாட்டு  மீனவர்கள் பிரச்சினையை மனித நேயத்துடன் அணுகும்படி கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு இராஜபக்சே ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், இந்த சந்திப்புக்கு அடுத்த நாளே தமிழக மீனவர்களை சிங்களப்படை அத்துமீறி கைது செய்துள்ளது என்பதிலிருந்தே இந்தியப் பிரதமருக்கு இலங்கை எந்த அளவுக்கு மரியாதை தருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இது பிரதமருக்கு மட்டுமின்றி, இந்திய இறையாண்மைக்கும் இழைக்கப்பட்ட அவமானமாகும்.
ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த 121 மீனவர்கள் இலங்கைச் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது மேலும் 57 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எந்த விதிக்கும் கட்டுப்படாமல்  இந்தியாவை தொடர்ந்து வம்புக்கு இழுக்கும் இலங்கையிடம் இனியும் மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பதில் எந்த பயனும் இல்லை.
எனவே, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 178 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் அடுத்த 24 மணி நேரத்தில் விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கையை இந்திய அரசும், தமிழக அரசும் எச்சரிக்க வேண்டும். அதன்படி, மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு மறுத்தால், தமிழக மீனவர்களை கடத்தியதாக இராமேஸ்வரம்  காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் சிங்கள கடற்படையினரை கைது சர்வதேச காவல்துறை (இண்டர்போல்) உதவியுடன் மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம்,

சென்னை: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் பாமக இடம் பெறுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழு நாளை கூடி ஆலோசனை நடத்துகிறது.லோக்சபா தேர்தலில் தேசியக் கட்சி, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்தது பாமக. பின்னர் ஜாதிய கட்சிகளுடன் இணைந்து கொண்டு சமூக ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியது.அதே ஜோரில் 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை முடுக்கிவிட்டது பாமக. ஆனால் திடீரென பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது பாமக. அந்த பேச்சுவார்த்தையில் நாங்கள் அறிவித்த 10 வேட்பாளர்களை திரும்ப பெற முடியாது. அந்த தொகுதிகளை விட்டே கொடுக்க முடியாது என்று பிடிவாதம் காட்டியது பாமக.ஆனால் பாமகவின் 10 தொகுதிகளில் 9ஐ பாஜகவும் தேமுதிகவும் கேட்டு அடம்பிடித்தன. இதனால் பாமக அக்கூட்டணியில் இடம் பெறுவதில் சிக்கல் உருவாகியுள்ளது.இந்நிலையில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நாளை (6-ந்தேதி) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும்.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.இந்த கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை ஏற்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு ஜி.கே. மணி அதில் கூறியுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: